லெஜன்ட் சரவணன்
தமிழ்நாட்டில் இருக்கும் தொழில் அதிபர்களில் மிக முக்கியமானவர் லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனர் லெஜன்ட் சரவணன் அவர்கள். தொழிலில் இவ்வளவு முன்னேற்றம் கண்ட இவரின் நீண்ட நாள் ஆசையான படத்தில் நடிப்பது தற்போது நிறைவேறி உள்ளது.
இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான லெஜன்ட் படம் படு மோசமான விமர்சனம் பெற்று இருந்தாலும் வசூல் ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. OTT தளத்திலும் நல்ல விலைக்கு லெஜன்ட் படம் போயுள்ளது.
இவரின் அடுத்த படத்திற்காக நீண்ட workout ஈடுபட்டு பின் வெளியிட்ட போட்டோவில் உடல் எடை குறைந்து சினிமா நடிகர்களுக்கு சவால் விடும் வகையில் work-out செய்து எப்படி இருக்கிறார் என்று பாருங்க . கடுமையான விமர்சனம் பெற்றாலும் தொடர்ந்து தனுடைய ஃபோட்டோக்களை வெளியிட்டு தன்னை நிரூபித்து வருகிறார்.