ரூபாய் 4000 கோடி நிலுவை தொகையை செலுத்திய மாநில அரசு | மின் உற்பத்தி நிறுவனங்களின் நிலுவை 80% குறைப்பு

புதுடெல்லி :  தமிழ்நாடு, ஆந்திரா உள்பட 13 மாநிலங்கள் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு தங்கள் நிலுவை தொகையை செலுத்தாமல் கிட்டத்தட்ட இந்திய மதிப்பில் ரூபாய் 5085 கோடி பாக்கி வைத்துள்ளது. இதனால் தமிழ்நாடு, ஆந்திரா,கர்நாடகா உள்பட 13 மாநிலங்களுக்கு மின் சந்தையில் மின்சாரம் வாங்கவும் விற்கவும் மத்திய அரசு தடை விதித்தது.

இதனை அடுத்து எழுந்த அரசியல் சூழ்நிலையில் ஆந்திரா, மகாராஷ்டிரா உள்பட 6 மாநிலங்கள் தங்களது நிலுவை தொகையை நேற்று ஒரே நாளில் செலுத்தி மின் உற்பத்தி நிறுவனங்களின் நிலுவை தொகை 80 சதவீதம் குறைத்து உள்ளது.

கிட்டத்தட்ட நேற்று ஒரு நாளில் 4000 கோடி ரூபாய் பாக்கி செலுத்தப்பட்டு உள்ளது. இதனால் நிலுவைத் தொகையை செலுத்திய மாநில அரசுகள் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்கியது மத்திய அரசு. இதன் விளைவாக மின் உற்பத்தி நிறுவனங்களின் நிலுவைத் தொகை ரூபாய் 1037 கோடியாக குறைந்து விட்டது.

2024 மக்களவைத் தேர்தலில் பாஜக vs ஆம் ஆத்மி கட்சி 

நாடு முழுவதும் மின்சாரத்தை உற்பத்தி செய்யவும் வாங்கவும் விற்கவும் மத்திய அரசு மின் சந்தையை நிறுவியுள்ளது. இதை கண்காணிக்க மத்திய மின் துறை அமைச்சகம் போசகோ என்ற அமைப்பை நிறுவியது. இந்த நிறுவனம் தான் இந்தியாவில் மின் சந்தையை கட்டுப்படுத்துகிறது. இந்த அமைப்புக்கு தமிழ்நாடு உள்பட 13 மாநிலம் நிலுவை தொகையாக 5000 கோடி பாக்கி வைத்துள்ளது. 

அதிகமாக, தெலங்கானா ரூ.1,380.96 கோடியும், தமிழகம் ரூ.926.11 கோடி நிலுவை தொகையாக வைத்திருந்தன. ராஜஸ்தான் ரூ.500.66 கோடி, ஜம்மு-காஷ்மீர் ரூ.434.81 கோடி, ஆந்திரா ரூ.412.69 கோடி, மகாராஷ்டிரா ரூ.381.66 கோடி, கர்நாடகா ரூ.355.20 கோடி, மத்தியப் பிரதேசம் ரூ.229.11 கோடி, ஜார்கண்ட் ரூ.214.47 கோடி, பிஹார் ரூ.173.50 கோடி, சத்தீஸ்கர் ரூ.27.49 கோடி, மணிப்பூர் ரூ.29.94 கோடி, மிசோரம் ரூ.17.23 மொத்தமாக 5000 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது. 

பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு 

அதன் பின் அந்தந்த மாநிலங்களில் எழுந்த அரசியல் பிரச்சனை தொடர்பாகவே ஆந்திரா, மகாராஷ்டிரா, ஜார்கண்ட், பிஹார் , மணிப்பூர், சத்தீஸ்கர் ஆகிய 6 மாநிலங்கள் பாக்கியை செலுத்தி உள்ளன. இதன் விளைவாக இந்த மாநிலங்கள் மீது போடப்பட்ட தடை விலக்கி கொள்ளப்பட்டது. மின் விநியோகம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால் தெலுங்கானா மாநிலம் மற்றும் கர்நாடகா மாநிலங்களின் தடை விலக்கி கொள்ளப்பட்டது.

இன்னும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உள்பட 5 மாநிலங்களுக்கு தடை நீடித்து வருகிறது. இதில் அதிக பாக்கி நிலுவை தொகைவைத்துள்ள அரசு ஜம்மு காஷ்மீர் ரூபாய் 435 கோடி, மத்திய பிரதேசம் 234 கோடி ரூபாய் செலுத்த வேண்டும்.

இந்த தடையால் நேற்று ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 12 விறக்கப்பட்டது. இந்த தடைக்கு முன் ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 7க்கு விற்கப்பட்டது.என்பது குறிப்பிடத்தக்கது.

வங்க கடலில் புதிய புயல் 

இந்த தடையை குறித்து மத்திய அரசு தரப்பில் கூறியதாவது, இந்த தடையால் சம்மந்தப்பட்ட மாநிலங்கள் மின் வர்த்தகதில் ஈடுபட முடியாது. சுருக்கமாக சொல்வெதென்றால் மின்சாரத்தை வெளி சந்தையில் இருந்து வாங்கவோ விற்கவோ முடியாது. இதனால் மின் துண்டிப்பு நிகழ வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியது

கரூரில் நேற்று முன்தினம் பேசிய மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தமிழக அரசின் மின் நிலுவைத் தொகை ஏற்கனவே சென்ற 4ஆம் தேதி கட்டப்பட்டு உள்ளது.  இன்னும் பாக்கி 70 கோடி மட்டுமே உள்ளன. அதையும் தமிழக அரசு இன்னும் இரு தினங்களில் செலுத்தி விடும் என்று கூறினார். 


இதனால் மக்கள் மின் தடை ஏற்படுமோ என்று அச்சம் கொள்ள தேவையில்லை. தற்பொழுது உள்ள திமுக அரசு மின் தடை இல்லாத ஆட்சியை வழங்குவதில் உன்னிப்பாக உள்ளது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி மக்களுக்கு நம்பிக்கை கொடுத்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post