தளபதி விஜய்
தளபதி விஜய் சூப்பர் குட் பிலிம்ஸ் இன் 100வாது படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சூப்பர் குட் பிலிம்ஸ்
1980களில் R.B சௌத்ரி இன் முயற்சியால் தொடங்கப்பட்ட சினிமா தயாரிப்பு நிறுவனம் சூப்பர் குட் பிலிம்ஸ். இந்த நிறுவனம் தமிழ் , தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் பல படங்களை தயாரித்து இருக்கிறது . இந்த நிறுவனத்தின் 100வாது படத்தில் யாரை நடிக்க வைப்பது என்று பல கேள்விகள் எழுந்தது.
இந்த கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் r.b சௌத்ரி மகன் மற்றும் நடிகருமான ஜீவா சர்க்கார் கேம் ஷோ விழாவில் கலந்து கொண்ட இவரிடம் இந்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நடிகர் ஜீவா அப்பா இதை பற்றி வெகு நாள் யோசித்து சென்ற வாரம் தான் தளபதி விஜய் அண்ணாவை பார்த்து பேசினார்.
அவரும் சூப்பர் குட் பிலிம்ஸ் 100வாது படத்தில் நடிக்க ஓகே சொல்லி இருக்கிறார் என்று விழா மேடையில் இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
நானும் அந்த படத்தில் நடிக்க இப்ப இருந்தே அப்பாவிடம் சான்ஸ் கேட்டுகிட்டு இருக்கேன் நடக்கும் என நம்புகிறேன் என்று பேசினார் .