தமிழக அரசு பள்ளிகளில் 10000 மேலான புதிய பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் | அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை : தமிழக அரசு பள்ளிகளில் தற்போது காலியாக இருக்கும் 10000க்கும் மேலான பணியிடங்களை நிரப்ப விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அன்பில் மகேஷ் பொய்யாமொழி பத்திரிகையாளர்களிடம் அறிவித்தார்.

பள்ளி கல்வித்துறையின் அலுவல் கூட்டம் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைப்பெற்றது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கிய இந்த கூட்டத்தில் பள்ளி கல்வித்துறை ஆணையர், இயக்குநர் மற்றும் பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர்களும் கலந்து கொண்டார்கள்.

ரஷ்யா அதிபர் புதிய காமெடி திட்டம்

இன்றைய கூட்டம் முடிந்த பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசினார். அவர் பேசியதாவது, இது எப்பவும் போல நடக்கும் கூட்டம் தான் என்று கூறினார். மாவட்டம் தோறும் பள்ளிகளில் நடைபெறும் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டு உள்ளது.  

ஒவ்வொரு மாவட்டத்தில் பள்ளிகளின் நிலைமை குறித்து விவாதிக்க பட்டது. பழுதடைந்த நிலையில் இருக்கும் பள்ளிகள் பற்றியும் , வகுப்பு அறை கட்டடங்கள் தேவைப்படும் பள்ளிகள் குறித்து பேசினோம்.அந்த குறைகள் உள்ள பள்ளிகளில் முன்னுரிமை அடிப்படையில் அதன் நிலை விரைவில் மாற்றப் பட உள்ளது என்று அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

முதலமைச்சர் நிதிஷ் குமாரை மிரட்டும் MLA 

இதற்காக நிதி அமைச்சரை சந்தித்து பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்ய வழங்கும் படி வலியுறுத்த போவதாக அன்பில் மகேஷ் கூறினார்.

மேலும் இந்த கூட்டத்தில் LKG மற்றும் UKG வகுப்புக்களுக்கு தேவைப்படும் சிறப்பு ஆசிரியர்கள் பற்றியும் விவாதம் நிகழ்ந்தது. ஆசிரியர் நியமனம் குறித்து பேசியதாக கூறினார்.

என்னது ஒரு குரல் புரட்சியா.! எனக்கு ஒரு விரல்  தெரியும், அது என்ன ஒரு புரட்சி?

இறுதியாக பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் கொடுப்பது குறித்து நிதித்துறை மற்றும் தகவல் தொழில் நுட்பம் சம்பந்த பட்ட துறையிடம் ஆலோசித்து நடவடிக்கைகள் எடுக்க படும் என்றும், இறுதியாக தற்போது தமிழக அரசு பள்ளிகளில் உள்ள 10000 மேல காலி பணியிடங்கள் விரைவில் பூர்த்தி செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர் சந்திப்பில் பேசினார்.

Post a Comment

Previous Post Next Post