டெலிவிஷன்
நடிகை அனுஷ்கா ஷெட்டி தன் ஓய்வு நேரங்களில் விஜய் டிவியின் முக்கிய சீரியலை விரும்பி பார்ப்பதாக அவரே கூரிய தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் டிவியில் தற்போது டாப் சீரியல்களில் ஒன்று தான் மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகும் தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் . இந்த சீரியலுக்கு தமிழ் நாட்டில் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். எப்பொதும் விறுவிறுப்பு குறையாமல் இருப்பதே இந்த சீரியலின் வெற்றி. இந்த சீரியலில் முன்னனி நாயகியாக நடிப்பவர் நடிகை பவித்ரா. இவர் முதலில் சரவணன் மீனாட்சி தொடரில் துணை நடிகையாக அறிமுகமாகி அதற்கு பின் ஈரமான ரோஜா என்ற சீரியல் மூலம் அறிமுகமானார்.
இப்போது தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் மெயின் கேரக்டர் அபியாக நடிக்கிறார்.
பவித்ராக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட நடிகை அனுஷ்கா பேசி உள்ளார். பவித்ரா, நான் முதலில் இதை நம்பவில்லை . பிராங்க் call என்று தான் நினைத்தேன். ஆனால் அவர் என்னை தொடர்பு கொண்டு பேசியது எனக்கு என்றும் நினைவில் இருக்கும் என்று பவித்ரா சமீபத்தில் நடிகை அனுஷ்கா ஷெட்டி பாராட்டியது பற்றி கூறினார்.
ஆம், நடிகை அனுஷ்கா ஓய்வு நேரத்தில் தென்றல் வந்து என்னை தொடும் சீரியலை விரும்பி பார்ப்பதாகவும் மிகவும் பிடிக்கும் என்று கூறினார் .