இந்த வார OTT இல் வெளியாகும் படங்கள் | ஆகஸ்ட் 12 OTT இல் வெளியாகும் படங்கள் DISNEY+HOT STAR, SONY LIV, VOOT APP


கோவிட்க்கு பிறகு இந்தியன் சினிமா ஒரு மிக பெரிய மாற்றம் அடைந்தது என்பதில் எந்தவித சந்தேகம் இல்லை. இதற்கு முக்கிய காரணம் OTT பிளாட்பாரம்.

உலகம் முழுவதும் 2019இல் கோவிட் அதிகம் பாதிப்பு அடைந்துள்ளோம். சினிமா துறையும் அப்படி தான். அந்த சமயத்தில் மக்களுக்கு மிக முக்கியமான பொழுது போக்கு சாதகம் OTT பிளாட்பாரம்.

OTT வந்த பிறகு தான் pan இந்தியா படம் என்று மக்கள் பேச ஆரம்பித்தார்கள்.

வட மாநில மக்கள் தெனிந்திய படங்கள் பார்க்க ஆரம்பித்தார்கள். தற்போது எந்த படம் வந்தாலும் 5 மொழிகளில் வெளியாகிறது.

ஆகஸ்ட் 12 வெளியாகும் OTT படங்கள்

DISNEY + hotstar , VOOT APP, Sony LIV முக்கியமான Ott பிளாட்பாரம்.

1. சபாஷ் மீது :


இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜின் வாழ்க்கை வரலாறு அப்படியே படமாக எடுக்க பட்டு இருக்கிறது. இந்த biopic மூவி voot app இல் வெளியாகி உள்ளது. 

இதில் மிதாலியாக டாப்சி பானு நடித்துள்ளார். இவர் தமிழ் சினிமா மூலம் அறிமுகமாகி தற்பொழுது இந்தி சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வருகிறார்.

தளம் : Voot select

2. காடவர்: 

அமலா பால் தயாரித்து நடித்துள்ள படம் தான் காடவர். இதில் அவர் டெட்பாடி அறுவை சிகிச்சை செய்யும் டாக்டர் ஆக நடித்து உள்ளார்.

தமிழ் சினிமாவில் இவர் நடிப்பில் கடைசி ஆக வெளியான படம் ஆடை . இந்த படம் எதிர் பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இதற்கு பின் இவரது படம் ஏதும் வெளி வரவில்லை.

இந்த படம் திரையில் வெளியாகும் என எதிர் பார்க்க பட்டது. ஆனால் இன்று ஆகஸ்ட் 12 OTT பிளாட்பாரம் வெளியாகி உள்ளது.

தளம் : disney+hotstar

3. கார்கி:

சில நாட்கள் முன் 2D எண்டர்டெயின்மெண்ட் தயாரித்து வெளியான படம் கார்கி. இதில் சாய் பல்லவி மெயின் ரோலில் நடித்துள்ளார். முழுக்க முழுக்க அவரை சுற்றி நடக்கும் கதை.

இது திரையில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. தற்போது இது OTT இல் வெளியாகி உள்ளது.

தளம் : SONY LIV

4. வாரியர் : 

புல்லட் பாட்டு மூலம் நாடு முழுவதும் ட்ரெண்ட் ஆன படம் தான் வாரியர். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் சில நாட்கள் முன் வெளி வந்த படம் தான் வாரியர்.

இதில் தெலுங்கு நடிகர் ராம் ஹீரோவாக நடித்து உள்ளார். தற்சமயம் தெலுங்கு சினமாவின் முன்னணி நாயகியாக வலம் வருகிற கீர்த்தி ஷெட்டி ஹீரோயின் ஆக நடித்து உள்ளார்.

இதை தமிழ் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று உள்ளது. இவர் தமிழில் சண்டக்கோழி, ஆனந்தம், ரன் உள்ளிட்ட மாபெரும் வெற்றி படங்கள் கொடுத்து உள்ளார்.

தளம் : disney + hotstar 

















Post a Comment

Previous Post Next Post