லால் சிங் சத்தா படம் தமிழ் ஃபுல் ரிவியூ | Laal Singh satha movie tamil Full review

லால் சிங் சத்தா படம் pan இந்தியா படமாக தமிழ்
, தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளி ஆகிறது.

இப்படத்தில் ஆமிர் கான் ஜோடியாக நடிகை கரீனா கபூர் நடிக்கிறார். இப்படத்தின் டிராக்டர் துல் குல்கர்னி.

இந்த படம் உலகம் முழுவதும் ஆகஸ்ட் 11 தேதி வெளியானது. இது ஒரு ரீமேக் படம் என்று ரசிகர் பக்கம் கேள்வி எழுந்தாலும் ஆமிர் கான் எப்படி லால் சிங் சத்தா கேரக்டர் இல் நடித்து இருக்கிறார் என்று ஆவல் அதிகம் ஆனது.

இயக்குநர் ராபர்ட் ஜெம்மெக்கிஸ் இயக்கத்தில் டாம் ஹேங்ஸ் நடிப்பில் கடந்த 1994ம் ஆண்டு வெளியான தி ஃபாரஸ் கம்ப் திரைப்படத்தின் கதையை  10 ஆண்டு கழித்து உருவாக்கி உள்ளார் துல் குல்கர்னி.

மேலும், 10 ஆண்டுகள் போராடி படத்தின் ரீமேக் உரிமையை பெற்று உள்ளார். கிட்டத்தட்ட, 20 வருட விடா முயற்சிக்கு பிறகு இந்திய படமாக உருவாகி உள்ள லால் சிங் சத்தா படம் ரசிகர்களின் மனதை வென்று உள்ளதா என்பது பற்றி விரிவாக இங்கே பார்ப்போம்..

படத்தின் கதை என்ன?

ஏற்கனவே தி ஃபாரஸ்ட் கம்ப் படம் பார்த்தவர்களுக்கு கதை நன்கு தெரிந்திருக்கும். 

ஸ்பெஷல் சைல்டாகவும் IQ லெவல் குறைவாகவும் உள்ள லால் சிங் சத்தா நடக்கக் முடியாமல் உள்ள நிலையில், அவனது பள்ளி தோழி ரூபா மற்றவர்களிடம் இருந்து தப்பிக்க ஓடு லால் சிங் ஓடு என ஊக்கம் தருகிறார், அதில் இருந்து லால் சிங் வாழ்க்கையின் ஓட்டம் ஆரம்பம் ஆகிறது. விளையாட்டில் சாதனை படைத்து, அப்படியே கல்லூரி படிப்பை முடித்து விட்டு இந்திய ராணுவத்தில் சேர்வது, காதலியை தேடிச் செல்வது, காதலி பிரிந்து சென்றதால் அவளை மறக்க பல வருடம் ஓடுகிறார். இறுதியில் தன் காதலின் கரம் பிடித்தார ? இல்லையா? காதலிக்கு என்ன ஆனது என்பது த லால் சிங் சத்தா படத்தின் கதை.


அமீர்கான் நடிப்பு

அமீர்கான் நடிப்பில் குறை இருக்காது என்பதில் ஐயம் இல்லை. லால் சிங் சத்தா படத்தின் தொடக்கத்தில் ரயிலை பிடித்துக் கொண்டு  தன் பெட்டியில் இருந்து  பாணி பூரி எடுத்துக் அருகே உள்ள பயணிகளுக்கு குடுத்து தன் கதையை சொல்ல தொடங்குகிறார் லால் சிங் இது தான் படத்தின் அழகு . ஆனால் அவரது இளமை வயது காட்சிகளில் தன் முந்தைய படத்தின் சாயல் இருக்கிறது என்று ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் குறை சொல்கிறார்கள்.

கரீனா கபூர் நடிப்பு 

 லால் சிங் சத்தாவில் கரீனா கபூர் காதபத்திரம் பெயர் ரூபா . தன் அப்பாவின் கண்டிப்பு , தொல்லை, கட்டுப்பாடு இதை எல்லாம் தாங்க முடியாமல் தன் வீட்டை விட்டு வெளியே செல்கிறார், பின் தன் வாழ்கை ஒரு நாடோடி ஆவதும் செல்லும் இடங்களில் ஆன் நண்பர்களுடன் பழகுவதும், லால் சிங் சத்தாவின் காதலை ஏற்கவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல் கஸ்டபடுவதும் என தனது நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

படத்தின் சிறப்பு

பொருள் செலவு பெரிய பிளஸ் தான். மேலும், அமீர்கான், கரீனா கபூர் மற்றும் நாக சைதன்யாவின் நடிப்பு கதையை மேலும் சிறப்பு ஆகிறது . ஜட்டி தயாரிக்கும் பிசினஸாக இங்கே நாக சைதன்யாவுக்கு மாற்றி இருப்பது ரொம்பவே நகைச்சுவை ஆக ரசிகர்களை தியேட்டரில் சிரிக்கவும் வைக்கிறது . ஒளிப்பதிவு பிரம்மாண்ட.  தனுஜ் திக்குவின் பின்னணி இசை மனதுக்கு இதம். மதங்களை விட மனிதம் என்று படத்தின் மூலம் அறிய முடிகிறது.

மைனஸ்

அதிக பொருள் செலவில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் ஆமிர் கான் மற்றும் கரீனா கபூர் இளமை கால காட்சி சற்று முகம் சுளிக்க வைக்கும்.

மேலும் படம் முழுவதும் ஹீரோ ஓரே ஓட்டம் ஆக இருப்பதால் தற்போதைய தலை முறை சற்று bore அடிக்க வைக்கிறது.


Post a Comment

Previous Post Next Post