விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் எணணிக்கை 2 பங்கு மூடிய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் ஆணை பிறப்பித்தது.
இந்த அறிந்த அன்புமணி ராமதாஸ் விட்ட அறிக்கையில் விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்கனவே செயல் பட்டு வந்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை 2 பங்கிற்கு மேல் முட சொல்வது விவசாயிகளுக்கு செய்யப்பட்ட மிக பெரிய குற்றம் என அறிவித்தார்.
இதே நிலைதான் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நீடிக்கிறது. செயல்பட்டு கொண்டிருக்கும் கொள்முதல் நிலையங்கள் குறைவாக உள்ள நிலையில் இது போன்று செய்வது விவசாயிகள் பாதிக்கும்.
விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் நெல் கொள்முதல் செய்யப்படுவதை காரணம் காட்டி மிகக் குறைந்த எண்ணிக்கையில் தான் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன என்று கூறி தற்போது உள்ள 49 நிலையங்களில் 35 மூட போவதாக தெரிகிறது.
இந்த சூழ்நிலையில் இனி 14 நிலையங்கள் தான் செயல்படும் என்று தெரிகிறது.
ஆனால் அங்கு நெல் விளையும் பரப்பு மற்றும் உற்பத்தி ஆகிவற்றுடன் ஒப்பிட்டு கணக்கிடும் போது தற்போது உள்ள நிலையங்கள் கூட பத்தாது என்பது தெளிவாக அறிய முடிகிறது.
இந்த நிலைமையை எடுத்து காட்டி பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் உள்ளூர் உழவர் அமைப்புகள் அளித்த கோரிக்கையின் அடிப்படையில் கடந்த February மாதம் கூடுதலாக 20 நிலையங்கள் திறக்கப்பட்டது.
ஆனால் தொடங்கி ஆறு மாதம் கூட முடியாத நிலையில் புதிதாக திறக்கப்பட்ட நிலையங்களில் 13ம் மற்றும் ஏற்கனவே செயல்பட்ட நிலையங்களில் 22 m தற்பொழுது மூட படுகிறது.
காவிரி பாசன மாவட்டங்களில் விளையும் விளைச்சல் விட அதிக விளைச்சல் வட மாவட்டமான விழுப்புரம்,திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் வேலூர் மாவட்டத்தில் தான் அதிக நெல் உற்பத்தி நடைபெறுகிறது. மேலும் தமிழகத்தில் நெல் உற்பத்தியில் முதல் இடம் விழுப்புரம் தான் அப்படி இருக்க நெல் கொள்முதல் நிலையங்களை மூடுவது மிக பாவம்.
தஞ்சாவூரில் உற்பத்தி செய்யப்படும் நெல்லின் அளவில் 73 சதவீதம் விழுப்புரம் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. அப்படி இருக்க அங்கு உள்ள கொள்முதல் நிலையங்களின் 214இல் அளவில் 156 நிலையங்கள் திறக்க வேண்டும்.
தமிழகத்தில் அரசின் மூலம் நேரடி நெல் கொள்முதல் செய்யப்படும் எண்ணிக்கை மிக குறைவு. மீதி தனியார் பக்கம் குறைந்த விலைக்கு விற்க படுகிறது.
இந்த நிலைமை மற்றும் விவாயிகளின் நிலைமை கருத்தில் கொண்டு ஏற்கனவே உள்ள நிலையங்கள் மீண்டும் திறக்கும் படியும் தமிழகத்தில் இது போன்று மூடப்பட்ட நிலையங்களை மீண்டும் திறக்க படியும் அன்புமணி ராமதாஸ் அறிக்கை விடுத்துள்ளார்
Tags
Tamil Nadu news