மக்களவைத் தேர்தலில் பா. ஜ. க வுக்கு எதிராக களம் இறங்கும் ஆம் ஆத்மி கட்சி | மணிஷ் சிசோடியா பேட்டி

டெல்லி : மணிஷ் சிசோடியா ஆம் ஆத்மி கட்சியின் துணைத் தலைவராக செயல்பட்டு வருகிறார். அவர் அளித்த பேட்டியில் நான் இன்னும் ஒன்று அல்லது இரண்டு தினங்களில் சிபிஐ ஆல் கைது ஆகலாம்.

அதற்கு முக்கிய காரணம் வரும் மக்களவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை பா. ஜ. க மோடி போட்டியாக பார்க்க ஆரம்பித்தார்கள் என்ற அச்சம் போல தான் தெரிகிறது.

சிபிஐ விசாரணை:

கடந்த 3 நாட்களாக மணிஷ் சிசோடியா வீடு உள்பட 21 இடத்தில் சிபிஐ சோதனை செய்து வருகின்றனர். காரணம் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளது என்ற புகார். 

பள்ளி நிறுவனம் எதிராக பள்ளிக்கல்வி துறை அதிரடி உத்தரவு 

இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக அவர் வீடு மட்டும் உறவினர் வீடு உள்பட 21 இடங்களில் சிபிஐ சோதனை செய்து வருகிறது. இந்த சோதனையில் முக்கியமான ஆவணங்கள் கிடைத்துள்ளதாக சிபிஐ தரப்பில் தகவல் வெளிவந்துள்ளது.

இன்று மனிஷ் சிசோடியா அளித்த பேட்டியில் நான் இன்னும் இரண்டு அல்லது மூன்று தினங்களில் சிபிஐயால் கைதாகலாம் அதற்கு நான் அச்சம் கொள்ளவில்லை. மேலும் சோதனையின் போது சிபிஐ அதிகாரிகள் என் கைப்பேசி மற்றும் மடிக்கணினியை எடுத்து சென்று விட்டனர். இதனால் நான் பயப்படுவேன் என்று மத்திய அரசு நினைத்து வருகிறது .

இன்றைய வானிலை வங்க கடலில் புயல் சின்னம் 

அவர்களால் என்னை ஒன்றும் செய்து விட முடியாது. மத்திய அரசு இந்த கலால் வரி மோசடி பற்றி கவலைப்படவில்லை.மாறாக ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வளர்ச்சியை பற்றி கவலைப்படுகிறது. அவர் வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக அரசுக்கு எதிராக நேரடியாக களம் இறங்குவார் என்பது தெரிய வருகிறது. 

டெல்லி ஆட்சியின் கீழ் உள்ள கல்வி முறையை பற்றி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான செய்திதான் மத்திய அரசுக்கு ஆம் ஆத்மி கட்சி மீது கோபத்தை ஏற்படுத்திருக்கும் என்று கூறினார்.

மோசடி வழக்கு 

டெல்லி அரசு சென்ற வருடம் நவம்பர் 16 புதிய மதுபான கொள்கையை அறிவித்தது. அதில் புதிதாக 849 புதிய மதிப்பான கடைகளில்  சில்லறை விற்பனை செய்ய தனியாருக்கு உரிமம் கொடுக்கப்பட்டது.மேலும் மதுபானங்கள் நேரடியாக மக்களின் வீடுகளுக்கு சென்று கொடுக்கும் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டது.

தமிழக அரசு பள்ளிகளில் புதிய வேலை 

இதை ஒரு பரிசோதனை முறையாகத்தான் டெல்லி அரசு கொண்டு வந்தது. மேலும் இந்தக் கொள்கை இந்த வருடம் ஜூலை 31 அன்று முடிவடைந்தது.

இந்த புதிய மதுபான கொள்கையை அமல்படுத்தியதில் அரசு முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா டெல்லி அரசு மீது குற்றம் சாட்டினார். இதனால் டெல்லி அரசுக்கும் துணை ஆளுநருக்கும் இடையே மோதல்கள் எழுந்தது.

மேலும் இந்த முறை கேட்டில் சிபிஐ விசாரணை வேண்டுமென்று துணை நிலை ஆளுநர் கேட்டுக்கொண்டார்.  டெல்லி அரசின் கலால் கொள்கை அறிவிப்பில் விதிமீறல் நடந்தது உறுதி செய்யப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபிஐ.   

ரஷ்ய அதிபர் புதின் காமெடி திட்டம் 

இதனால் மணிஷ் சிசோடியா உள்பட பலர் மீது வழக்கு பதிவானது மற்றும் அவருக்கு சொந்தமான 21 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தினர்.

Post a Comment

Previous Post Next Post