UPI பணபரிமாற்ற கட்டணச் சர்ச்சைக்கு முற்று புள்ளி வைத்தது மத்திய அரசு | மக்கள் நிம்மதி

டெல்லி : UPI  பணபரிமாற்ற சேவைகளுக்கு இனி கட்டணம் என்ற செய்தி பரவி வந்த நிலையில்  மத்திய அரசின் நிதி அமைச்சகம் UPI சேவையை வழங்கும் கூகுள் பே, ஃபோன் பே, Paytm போன்ற சேவைகளுக்கு தொடர்ந்து கட்டணம் இல்லை என்று அறிக்கை வெளியானது முதல் Upi சேவையை பயன்படுத்தும் மக்கள் மற்றும் UPI சேவையை வழங்கும் நிறுவனங்கள் நிம்மதி அடைந்துள்ளது.

UPI பணபரிமாற்றம் 

முன்னதாக, வங்கி கணக்கில் பணம் எடுப்பது, செலுத்துவது மற்றும் பணம் பரிமாற்றம் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு மக்கள் வங்கிகளுக்கு செல்ல வேண்டிய நிலமை  இருந்தது. ATM சேவை தொடங்கிய பின் மக்கள் வங்கிகளுக்கு செல்லாமல் எங்கு சென்றாலும் இந்த ஒரு ATM அட்டையை பயன்படுத்தி பணம் பரிமாற்றம் செய்து வந்தனர் . இந்த வசதி மூலம் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்கள்.

Satellite city ஆக மாறும் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் 

ஆனால் , அதுவும் வெகு நாட்கள் நிலைக்கவில்லை. காரணம் ATM பரிவர்த்தனைகளுக்கு வங்கிகள் கட்டணம் வசூலிக்க ஆரம்பித்ததும் மக்கள் மிகுந்த அதிற்ச்சி அடைந்தனர். அதற்கு மாற்று வழியாக அறிமுகம் ஆனது தான் இந்த UPI பணபரிமாற்ற சேவை.

இந்த சேவை மூலம் மக்கள் தங்கள் ஒரு வங்கி கணக்கில் இருந்து யாருக்கு வேண்டும் என்றாலும் கட்டணம் இல்லாமல் பணப்பரிமாற்றம் செய்ய முடியும். இந்த சேவையை முதலில் கூகுள்பே மற்றும் ஃபோன்பே வழங்க தொடங்கியது. மக்களை UPI பணபரிமாற்ற சேவைக்கு இழுக்க நிறுவனங்கள் பல்வேறு ஆஃபர் கொடுத்தது. 

இன்றே கடைசி Tnpsc Group I 

இந்த ஆஃபர் மற்றும் இலவச சேவை போன்ற வற்றால் மக்கள் இந்த சேவையை பயன்படுத்த ஆரம்பித்தார்கள். அதன் பின் பல்வேறு நிறுவனங்கள் இந்த சேவையை வழங்கும் நோக்கில் இந்திய சந்தைக்கு வந்தது. அமேசான் பே, Paytm, ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் ஆரம்பிக்க பட்டது.

தற்போது, இந்தியாவில் ஒரு மணி நேரத்தில் இந்த UPI சேவையை பயன்படுத்தி கோடி கணக்கில் பணப்பரிமாற்றம் நிகழ்கிறது. தற்சமயம்,இந்த சேவைக்கும் கட்டணம் என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவிக்க போவதாக செய்திகள் வெளிவர தொடங்கியது.

மின் தடை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் 

இதனால் மக்கள் அனைவரும் முகிந்த கோபத்தில் மற்றும் குழப்பத்தில் இருக்கின்றனர். UPI சேவையை வழங்கும் நிறுவனங்கள் அனைத்தும் அதிற்ச்சியில் உறைந்தனர். இந்த செய்தியால் தங்கள் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை  இழந்து விடுவோம் என்று கருதினர்.

மத்திய அரசு விளக்கம்

இந்நிலையில் ஏற்கனவே ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதால் தான் யுபிஐ சேவையை பயன்படுத்தி வருவதாகவும் தற்போது இதற்கும் கட்டணம் வசூலிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களும் விவாதங்களும் எழுந்தது.

இந்த நிலையில் யுபிஎஸ் சேவைகளுக்கு கட்டண வசூலிக்கும் எந்தவித திட்டங்களும் மத்திய அரசிடம் இல்லை என மத்திய நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. 

இந்த அறிவிப்பு வெளியான பிறகு யுபிஐ பயன்படுத்தும் வாடிக்கையாளர்களும் சேவை வழங்கும் நிறுவனங்களும் நிம்மதி அடைந்துள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post