தென்காசி மாவட்டத்தில் செப்டம்ர் 2 வரை 144 தடை போட்ட மாவட்ட ஆட்சியர் காரணம் உள்ளே !

தென்காசி  : தென்காசி மாவட்டத்தில் வரும் செப்டம்பர் 2  தேதி மாலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ். தற்பொழுது தென்காசி மாவட்டத்தில் குற்றால சீசன் ஆரம்பித்து சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்த வண்ணம் உள்ளது. 

இந்நிலையில் இந்த அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டது மிகுந்த வருத்தம் அளிப்பதாக சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

ஒண்டி வீரன் வீர வணக்க நாள் பூலிதேவன் பிறந்த நாள் 

தென்காசியில் வரும் ஆகஸ்ட் 20 நாள் ஒண்டி வீரன் வீர வணக்க நாள் நடக்க உள்ளது இதன் காரணமாகவும் மற்றும்  மாவீரன் பூலித்தேவன் பிறந்த தினம் வரும் செப்டம்பர் மாதம் 2 நாள் கொண்டாட பட உள்ளது. 


மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையில், வரும் ஆகஸ்ட் 20இல் ஒண்டி வீரன் வீர வணக்க நாள் அவர் சொந்த ஊரான சிவகிரி வட்டம் பச்சேரி கிராமத்தில் 251வது வீர வணக்க நாள் நடக்க உள்ளது. 

அது மட்டும் இல்லாமல் செப்டம்பர் 2 நாள் மாவீரன் பூலித்தேவன் பிறந்த தினம் அவர் ஆண்ட பாளையம் நெற்கட்டும்செவலில் நடப்பதால் தென்காசி மாவட்டம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை சார்ந்தவர்கள் வீரர்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்த அணி வகுத்து செல்வர்.


கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் ஆகஸ்ட் 20 முதல் செப்டம்பர் 2 நாள் மாலை 6 மணி வரை 144 ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவித்தார். இதனால் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக செல்லாமல் சமூக இடைவெளியுடன் நான்கு நான்கு நபர்களாக செல்ல வேண்டும் என ஆட்சியர் அறிவித்துள்ளார். 


மேலும் இந்த அறிக்கை குற்றால மெயின் அருவி மற்றும் ஐந்து அருவிகளில் குளிக்க வரும் சுற்றுலா பயணிகள் அனைவருக்கும் பொருந்தும் என்று தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அறிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post