வாரிசு
தளபதி விஜய் மற்றும் ரஷ்மிகா மந்தண்ணா இணைந்து நடிக்கும் வாரிசு திரைப்படம் ரீலீஸ் ஆகும் முன்பே 100 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் தளபதியின் வாரிசு படத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், யோகி பாபு மற்றும் பலர் நடிப்பில் உருவாகும் இந்த படத்தை தில் ராஜ் தயாரிக்கிறார். வாரிசு படத்தின் ஷூட்டிங் விரைவில் முடிய இருக்கும் நிலையில் படம் வரும் பொங்கல் தினத்தன்று ரீலீஸ் ஆகும் என்று படக்குழு அறிவித்தது.
இந்த சமயத்தில் படத்தின் ஷூட்டிங் கூட முடியாத வாரிசு படத்தின் OTT ரைட்ஸ்யை பிரபல OTT தளமான அமேசான் கைப்பற்றியுள்ளது. அதும் வாரிசு OTT ரைட்ஸ் 60 கோடி கொடுத்து வாங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. வாரிசு படத்தின் satellite உரிமையை 50 கோடிக்கு முன்னணி தொலைக்காட்சியான சன் டிவி வாங்கியுள்ளது.
இறுதியாக படத்தின் ஆடியோ ரைட்ஸ் 10 கோடிக்கும் விற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. மொத்தமாக தளபதியின் வாரிசு திரைப்படம் ரீலீஸ் ஆகும் முன்பே கிட்டத்தட்ட 120 கோடி வசூல் செய்து இருக்கிறது என்ற தகவலை அறிந்த திரைத்துறை அதிர்ந்து போய் இருக்கிறது .