Shriya Saran
இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஸ்ரேயா அவருக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அவரின் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி உள்ளது.
இந்திய சினிமாவில் முன்னனி நடிகையாக இருந்தவர் ஸ்ரேயா. தமிழ்,தெலுங்கு,ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து வந்த இவர் மிகச்சிறந்த டான்சர் ஆவார் .
தமிழில் வெளியான எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தில் அறிமுகமாகி அதன் பின் தனுஷ், விஜய்,விக்ரம் போன்ற தமிழ் சினிமாவின் முன்னணி நடிக்களுடன் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். அது மட்டுமில்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக சிவாஜி படத்திலும் நடித்து இருந்தார். இந்த படம் இவரை பாலிவுட் அளவுக்கு கொண்டு போய் சேர்த்தது.
அதன் பின் சினிமாவில் வாய்ப்பு குறைந்ததால் 2018 ஆம் ஆண்டு அவரது காதலரான ரஷிய தொழில் அதிபரை மணந்தார். இப்போது வெளிநாட்டில் செட்டில் ஆன இவரை சமூக வலைதளத்தில் மட்டுமே பார்க்க முடிகிறது . ஏனென்றால் சோஷியல் மீடியாவில் ஆக்டிவ் இருந்து வருகிறார். எப்பொதும் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருப்பார்.
சமீபத்தில் தனது மகளுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். குழந்தை உடன் சந்தோசமாக இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஹேப்பி ஃபேமிலி என்று கமென்ட் செய்து வருகின்றனர்.