Bigg Boss season 6
தமிழ்நாட்டில் பிக் பாஸ் சோவிருக்கு தனியாக ஒரு ரசிகர் பட்டாளம் இருக்கிறது. மேலும் , கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த ஷோ TRP யில் எப்பொதும் முதல் இடம் தான்.
தமிழில் மட்டும் இல்லாமல் இந்தியா முழுவதும் மிகவும் ஃபேமஸ் ஆன ஷோ என்றால் அது பிக் பாஸ் தான். முதலில் ஹிந்தியில் மட்டும் வெளியாகி கொண்டிருந்த இந்த ஷோ சில வருடங்களுக்கு முன்னர் தமிழிலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது .
தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ள நிலையில் இப்போது பிக் பாஸ் சீசன் 6ன் புராமோ வெளியாகி உள்ளது . கமல்ஹாசன் தனது விக்ரம் படத்தின் ஸ்டைலில் டயலாக்கை பேசி இந்த புரோமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டு உள்ளது.
விரைவில் தொடங்கவுள்ள பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளர்கள் யார் யார் என மக்கள் இப்போதே கற்பனை செய்ய ஆரம்பித்து விட்டார்கள் .