விக்ரம்
நடிகர் கமஹாசன் நடிப்பில் ஜூன் 3 தேதி வெளியாகி மெகா பிளாக் பஸ்டர் ஆன படம் விக்ரம்.
இந்த படத்தில் கமலுடன் ,விஜய் சேதுபதி, பஹத் பாசில், சூர்யா, நடிகை காயத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர். விக்ரம் வெளியாகி 100 ஆனதை அடுத்து கமலஹாசன் மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
காயத்ரி
தமிழ் சினிமாவில் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் காயத்ரி. இந்த படத்தின் வெற்றியை அடுத்து தமிழில் பல படங்கள் நடித்துள்ளார். இறுதியாக தமிழில் விஜய் சேதுபதி உடன் மாமனிதன் படத்தில் நடித்தார்.
விக்ரம் படத்தில் பஹத் பாசிலுக்கு ஜோடியாக நடித்த காயத்ரி விக்ரம் பட ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
இந்த படத்தில் காயத்ரியை விஜய் சேதுபதி கொல்லும் காட்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் அது. போட்டோவில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியிட்டு உள்ளார்.