காக்க காக்க 2 படத்தின் அப்டேட் கொடுத்த கெளதம் மேனன் ! குஷியான ரசிகர்கள் !

கெளதம் வாசுதேவ் மேனன் 

சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்திய திரைப்படம் தான் 2003 ஆம் ஆண்டு வெளியான காக்க காக்க . இந்த படத்தின் 2 பாகம் குறித்து இயக்குநர் கெளதம் மேனன் அப்டேட் வெளியிட்டு இருக்கிறார் .

Kakka Kakka 2 latest update


காக்க காக்க 

மின்னலே படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் கெளதம் மேனன் இயக்கிய 2வது படம் சூர்யா சினிமா வாழ்க்கையில் முக்கிய திருப்பு முனையை ஏற்படுத்திய படம் .

மாஸ் ஆன போலீஸ் அதிகாரியாக வலம் வந்த சூர்யாவுக்கு ஜோடியாக ஜோதிகா நடித்து இருந்தார் .இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது விஜய் அல்லது அஜித் தான் , சில காரணங்களால் நடிக்க நடிக்க முடியாம போனதால் சூர்யா நடித்து மாபெரும் வெற்றி அடைந்தது .

காக்க காக்க 2

கௌதம் மேனன் இயக்கிய வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கௌதம் மேனன் இடம் பெண் ஒருவர் வாரணம் ஆயிரம் 2 எப்போது வரும் என்று கேள்வி கேட்டார் .

Kakka Kakka 2 latest update

அதற்கு GVM வாரணம் ஆயீரம் 2 பற்றி நான் இன்னும் யோசிக்கவில்லை . ஆனால் சூர்யாவை வைத்து காக்க காக்க 2 எடுக்க ஒரு யோசனை இருப்பதாக  மாஸ் ஆன அப்டேட் கூறியதும் அரங்கமே அதிர்ந்தது.விரைவில் இது நடக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள் .

Post a Comment

Previous Post Next Post