பொன்னியின் செல்வன்
சோழர்களின் வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் கல்கி எழுதிய அற்புதமான படைப்பு. தமிழில் சினிமாவில் இந்த நாவலை படமாக எடுக்க MGR மற்றும் கமலஹாசன் ஆசை பட்டனர்.
ஆனால் அந்நாளில் அது எடுக்க முடியாத நிலையில் தற்போது இயக்குநர் மணிரத்னம் பொன்னியின் செல்வனை படமாக எடுத்து உள்ளார். 2 பாகமாக வெளிவரும் இந்த படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30 நாள் வெளிவர இருக்கிறது. மிக பிரமாண்டமாக உருவாகி உள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு,கன்னடம், மலையாளம்,மற்றும் இந்தி மொழிகளில் வெளிவர இருக்கிறது.
விடுதலை படத்தில் சூரி கேரக்டர் first choice இவரா..
வரும் செப்டம்பர் 6 தேதி அதாவது நாளை இந்த படத்தின் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற இருக்கிறது.
புதிய அப்டேட்ஸ்
பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் முக்கிய விருந்தினராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்று படக்குழு அறிவித்து உள்ளது.
அது மட்டும் இல்லாமல் நேற்று இப்படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்களின் போஸ்டரை வெளியீட்டு படக்குழு ஷாக் மேல் ஷாக் கொடுத்து வருகிறது.
ஏற்கனவே , ஆதித்ய கரிகாலான விக்ரம் , வந்திய தேவன் நடிக்கும் கார்த்தி, நந்தினி நடித்த ஐஷ்வர்யா ராய், குந்தவை தேவி ஆக நடித்த திரிஷா ஆகியோர்களின் போஸ்டர்களை வெளிட்டது. தற்போது மற்ற கேரக்டர் போஸ்டர்கள் தொடர்ந்து வெளிவர ஆரம்பித்தது.
அதன் படி பெரிய பழு வேட்டையர் சரத்குமார், சின்ன பழு வேட்டையர் பார்த்திபன் போஸ்டர்கள் வெளிவந்தது.
நேற்று வானதி கேரக்டரில் சோபிதாவின் புகைப்படம் மற்றும் பூங்குழலி ஐஸ்வர்ய லட்சுமி , சுந்தர சோழர் பிரகாஷ்ராஜ் , செம்பியன் மாதேவி ஜெயசித்ரா , மதுராந்தகன் கேரக்டரில் நடிக்கும் ரஹ்மான் ,பிரபு பெரிய வேளாளர் , லால் நடித்த மலையமான்,மற்றும் விக்ரம் பிரபு நடிக்கும் பார்த்திபேந்திர பல்லவன் போன்றர்களின் போஸ்டர்களை படக்குழு வெளியீடு செய்து உள்ளது.
நாளை நடக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி கமல் மற்றும் படக்குழு கலந்து கொள்ள விருகின்றனர்.
இசை வெளியீட்டு விழா காண கூட்டம் அலை மோதும் என்பதில் சந்தேகம் இல்லை.