ராக்கி பாய்
KGF சாப்டர் 2 படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு நடிகர் யாஷ் அடுத்து என்ன படத்தில் நடிக்க போகிறார் என்ற கேள்விக்கு ரசிகர்களுக்கு இன்ப செய்தி கிடைத்துள்ளது .
அதும் பிரமாண்ட செலவில் பிரமாண்ட டைரக்டர் உடன் இணைகிறார் நம்ம ராக்கி பாய் . படத்தின் பட்ஜெட் மட்டுமே 1000 கோடியாம் . இதை அறிந்ததும் சினிமா வட்டாரங்கள் ஷாக் ஆகியுள்ளனர் .
KGF புகழ் யாஷ் அடுத்ததாக பிரமாண்ட டைரக்டர் ஆன ஷங்கர் இயக்கத்தில் நடிக்க போகிறார் . ஷங்கர் மற்றும் யாஷ் இணையும் இந்த படத்தை கிட்டத்தட்ட 1000 கோடி செலவில் உருவாக இருக்கிறது . கரண் ஜோகர் மற்றும் netflix இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை இயக்குநர் ஷங்கர் தன்னுடைய இந்தியன் 2 மற்றும் RC 15 படங்களுக்கு பின் இயக்குவார் என்று தெரிகிறது .
1000 கோடி பட்ஜெட் இல் இந்த படத்தின் கதை என்னவென்று தெரியுமா ? வேள்பாரி என்ற நாவலை தான் படமாக இயக்க போகிறார் இயக்குநர் ஷங்கர் . வேள்பாரி கேரக்டறில் நம்ம யாஷ் பாய் நடிக்க இருக்கிறார் . இந்த செய்தியை அறிந்ததும் ரசிகர்கள் குஷி அடைந்துள்ளனர் .