பிரம்மாஸ்திரா
பாலிவுட் திரைப்படமான பிரம்மாஸ்திரா திரைப்படம் வெளியாகி 2 நாள் ஆகி உள்ள நிலையில் இந்த படத்தின் box office நிலவரத்தை பற்றிய செய்திகள் வெளியாகி உள்ளது.
பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் ,ஷாருகான் அமிதாப்பச்சன் மற்றும் தெலுங்கு நடிகர் நாகராஜுண்ணா ஆகியவர் நடிப்பில் வெளியான படம் பிரம்மாஸ்திரா . இந்த படம் வெளியாகும் முன்பே கிட்டத்தட்ட 3 மாதம் மேல் படத்தின் ப்ரோமோஷன் வேளையில் படக்குழு இறங்கி இருந்தது .பிரமாண்டமாக தயாரான படம் செப்டம்பர் 8 தேதி வெளியாகி மோசமான விமர்சனங்களை பெற்றுள்ளது .
அனைத்து இடங்களிலும் மோசமான விமர்சனம் பெற்ற பிரம்மாஸ்திரா படம் வசூலில் நல்ல வேட்டை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது . இந்த படம் முதல் நாள் மட்டும் உலக அளவில் 75 கோடி வரை வசூல் செய்ததாக படக்குழு அறிவித்தது .
நேற்று விடுமுறை தினம் என்பதால் இந்த படம் 2 நாள் முடிவில் கிட்டத்தட்ட 150
கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது . இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவராத சூழ்நிலையில் இது உண்மையா என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர் .
ஆனால் , முதல் 2 நாள் முடிவில் தமிழகத்தில் மட்டும் 3.75 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது . முதல் 2 நாள் முடிவில் 3 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ள முதல் ஹிந்தி திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது .