பிரம்மாஸ்திரா
பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூர் மற்றும் அலியா பட் நடித்த பிரம்மாஸ்திரா திரைப்படம் தமிழ் ,தெலுங்கு ,மலையாளம்,கன்னடம்,ஹிந்தி,ஆகிய மொழிகளில் 400 கோடி பொருட்செலவில் உருவானது . மேலும் ,இந்த படத்தில் ஷாருகான் ,நாகர்ஜுனா மற்றும் அமிதாப்பச்சன் ஆகியோர் நடித்துள்ளார்கள்.
திரைப்படம் வெளியாகும் முன்பே பிரம்மாஸ்திரா திரைப்படத்தை boycott செய்யுங்கள் என்ற கருத்து ஒருபக்கம் பரவி கொண்டிருந்த இக்கட்டான சூழ்நிலையில் இந்த படம் நேற்று வெளியாகி மோசமான விமர்சனங்களை பெற்றுள்ளது .
மோசமான ரிவியூ பெற்று இருந்தாலும் உலக அளவில் பிரம்மாஸ்திரா படம் நல்ல வசூல் செய்துள்ளது . இந்த படம் இந்தியா ,அமெரிக்கா,ஆஸ்திரேலியா உள்பட பல நாடுகளில் வெளியாகி box office இல் நல்ல வசூல் செய்து உள்ளது.
பிரம்மாஸ்திரா படம் முதல் நாள் முடிவில் box ஆஃபிஸில் 75 கோடி சம்பாத்தித்துள்ளது என தயாரிப்பு நிறுவனம் சார்பாக தகவல் வெளியாகி உள்ளது .