திரைத்துறையில் தனது 63 வருடங்களை கடந்துள்ள உலக நாயகன் கமல்ஹாசன்

உலக நாயகன் கமல் ஹாசன் திரைத்துறையில் அறிமுகமாகி இதுவரை 63 வருடங்கள் ஆகின்றது. சமீபத்தில் அவர் தயாரித்து நடித்துள்ள விக்ரம் படம் இமாலய சாதனை படைத்தது. அது மட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவின் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனை படைத்து உள்ளது. விக்ரம் படம் தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் இந்தியா முழுவதும் அனைவரது கவனத்தையும் பெற்று உள்ளது. இந்த படத்தின் அடுத்த பாகத்திற்கு சினிமா ரசிகர்கள் காத்து கொண்டு இருக்கின்றனர்.

திரைத்துறையில் 63 வருடங்களை கடந்த அவரை சிறப்பிக்கும் வழியாக அவரை பற்றி இந்த பதிவில் பாப்போம் .

நேரம் இருந்தால் இதையும் படிங்க மக்களே 

உலக நாயகன்:

தமிழ் சினிமாவில் களத்தூர் கண்ணம்மா மூலம் அறிமுகம் ஆகி முதல் படத்திலேயே தேசிய விருது வென்று சாதனை படைத்துள்ளார். அந்த படத்திற்கு பிறகு தன இளமை பருவத்தில் முதலில் ஜூனியர் அசிட்டேன்ட பின் அசிட்டேன்ட டைரக்டர், நடன இயக்குனர் இன்னும் பல துறையில் முத்திரை படைத்து உள்ளார்.

அதன் பின் இயக்குனர் சிகரம் அவரது அறிவைரைபடி நடிக்க ஆரம்பித்தார்.
தொடக்கத்தில் சிறுசிறு பாத்திரத்தில் நடித்து பாலச்சந்தர் இயக்கத்தில் ஹீரோவா அறிமுகம் ஆனார்.


பிறகு தமிழ் சினிமா மட்டும் இன்றி தெலுங்கு,மலையாளம்,கன்னடம்,ஹிந்தி சினிமா என அனைத்து சினிமா துறையிலும் அறிமுகமாகி பல ஹிட் படங்களை கொடுத்து உள்ளார்.

மெகாஹிட் திரைப்படம் 

தமிழ் 80's இல் வெளியான படங்களில் இவரது படங்கள் இந்தியா முழுவதும் தனி ரசிகர் பட்டாளம் உள்ளார்கள். 16 வயதினிலே, மூன்றாம் பிறை, போன்ற படங்கள் இவருக்கு தேசிய விருது பெற்று தந்து உள்ளது. இவர் தன் நடிப்பின் மூலம் 3 தேசிய விருது வென்றுள்ளார் .


இவரது நடிப்பு திறமையை பாராட்டி இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்து பெருமை படுத்தியது.

இயக்குநர் கமல்  

சினிமாவில்  நடிப்பது மட்டும் இன்றி டைரக்டர் ஆகவும் அவதாரம் எடுத்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து உள்ளார். ஹெய்ராம் படத்தில் இவரது நடிப்பு பாத்து ஆச்சரிய படாதவர்கள் இல்லை. இறுதியாக விஸ்வரூபம் படத்தில் ஹாலிவுட் டைரக்டர் பின்னுக்கு தள்ளும் அளவுக்கு இயக்கினார்.

தயாரிப்பாளர் கமல் 

RKFI என்ற நிறுவனத்தை தொடங்கி இன்று வரை புதுபுது திரைஅம்சம் உள்ள படங்களை தயாரித்துள்ளார்.

இவர் சினிமா துறையில் அறிமுகமாகி 63 வருடங்கள் வெற்றிகரமாக கடந்து உள்ளார். அவரை பெருமை படுத்தும் விதமாக இந்த பதிவு செய்யப்பட்டு உள்ளது .

Post a Comment

Previous Post Next Post