சென்னை : தமிழ்நாடு அரசின் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் நாளை பகல் 11:59 க்குள் தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இன்றுடன் ஆகஸ்ட் 22 குரூப் ஒன் தேர்விற்கான கால அவகாசம் முடிவடைகிறது. மேலும் விண்ணப்பங்களை திருத்துவதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 27 முதல் ஆகஸ்ட் 29 வரை கொடுக்கப்படுகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜி பத்திரிக்கை சந்திப்பு
இந்த நாட்களில் தங்களது விண்ணப்பங்களில் ஏதேனும் தவறு செய்திருந்தால் திருத்திக் கொள்ளலாம் என்று டிஎன்பிசி தரப்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது. 92 பணியிடங்களுக்கான டிஎன்பிசி யின் குரூப்-1 அறிவிப்பு கடந்த ஜூலை மாதம் 21 இல் வெளியானது. இதற்கான முதல் நிலை தேர்வு வரும் அக்டோபர் மாதம் 30 ஆம் நாள் நடக்க உள்ளது.
முதல் நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அடுத்து நடக்கும் மெயின் எக்ஸாம் எழுத தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கான தகுதிகள் மற்றும் பாடப்பகுதிகள் டிஎன்பிஎஸ்சி வலைதளத்தில் குரூப் ஒன் நோடிஃபிகேஷன் விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது.
குரூப் 2 ரிசல்ட்
ஏற்கனவே கடந்த மே மாதம் குரூப் 2 முதல் நிலை தேர்வு முடிவடைந்த நிலையில் அதற்கான ரிசல்ட் இன்னும் வரவில்லை என்று மாணவர்கள் மத்தியில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விரைவில் குரூப் 2 முதல்நிலை தேர்வுக்கான ரிசல்ட் வெளியிடுமாறு டிஎன்பிசி திறப்பிற்கு கோரிக்கைகள் எழுந்துள்ளது.
2024 மக்களவைத் தேர்தலில் பாஜக vs ஆம் ஆத்மி
அது மட்டும் இல்லாமல் கடந்த ஜூலை மாதம் 24 அன்று நடந்த குரூப் 4 தேர்வு அதற்கான ரிசல்ட்டும் எப்போது வரும் என்று தேர்வர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றார். இந்நிலையில் வரும் அக்டோபர் மாதம் 30 ஆம் நாள் டிஎன்பிசி யின் ஒருங்கிணைந்த குரூப் ஒன் தேர்வு நடக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வருடம் குரூப்-1 தேர்விற்கு கிட்டத்தட்ட 10 லட்சம் தேவர்கள் பதிவு செய்திருப்பார்கள் என்று நம்பப்படுகிறது.
தேர்வு பாடப்பகுதிகள்
டிஎன்பிசி யின் குரூப் ஒன் தேர்வுக்கான பாடப்பகுதி மற்ற குரூப் 2 குரூப் 4 பாட பகுதியில் இருந்து சற்று வேறுபட்டது. குரூப் 2 குரூப் 4 தமிழ் 100 மதிப்பெண் கேட்கப்பட்டது. ஆனால் இந்த டிஎன்பிஎஸ்சி குரூப் ஒன் தேர்வு முழுக்க முழுக்க ஜெனரல் ஸ்டடிஸ் போட போது இருந்து கேட்கப்பட உள்ளது.
பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு
இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அடுத்த நிலை தேர்வான முதன்மை எழுத்து தேர்வுக்கு தேர்ச்சி அடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் குரூப்-1 முதன்மை எழுத்து தேர்வில் தமிழ் மொழி கட்டாய தேர்வு நடக்க உள்ளது. இந்த கட்டாயத் தேர்வில் குறைந்தது 40 சதவீதம் மதிப்பெண் பெற்றால் அடுத்த நிலை தேர்வுக்கு தகுதியானவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனவே தேர்வர்கள் இதனை புரிந்து அதற்கு ஏற்றவாறு தங்களை தயார் செய்து கொள்ளுங்கள். முதன்மை எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்த நிலை தேர்வான இன்டர்வியூ தேர்விற்கு தேர்வு செய்யப்படுவார்கள்.