சினிமா : தளபதி விஜயின் 67 படத்தில் நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தளபதி 67 படத்தை இயக்குநர் லோகேஷ் இயக்க உள்ளது அனைவரும் அறிந்ததே. இந்த படத்திற்கான திரைக்கதை வேளையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது நண்பரான இயக்குநர் ரத்னா உடன் ஈடுபட்டு உள்ளார். இருவரும் அதற்காக தங்களது சமூக வலைதள பக்கத்தில் இருந்து விலகி வேலை பார்த்து வருகிறார்கள். சில நாட்களுக்கு முன் அதை உறுதி செய்யும் வகையில் இருவரும் இணைந்து எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் viral ஆனது.
வாரிசு :
தளபதி விஜய் தற்போது தனது 66 படமான வாரிசு நடித்து கொண்டு இருக்கிறார். இந்த படத்தின் ஷுட்டிங் விரைவில் முடிய உள்ளதாக கருதப்படுகிறது. தெலுங்கு டைரக்டர் வம்சி இந்த படத்தை இயக்குகிறார். இசை அமைப்பாளர் தமன் இசை அமைத்துள்ள இந்த படத்தின் இசை விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த படம் வரும் பொங்கல் அன்று ரீலீஸ் செய்ய படக்குழு முடிவு எடுத்துள்ளது. அதே பொங்கல் தினத்தன்று நடிகர் அஜீத் நடிக்கும் 61 வது படவும் ரீலீஸ் ஆக வாய்ப்பு இருக்கிறது. இதற்கான முயற்சியில் படக்குழு உள்ளது.
Sakshi Agarwal Latest Stunning reels must watch
இதற்கு பின் தளபதி விஜய் லோகேஷ் படத்தின் நடிக்க உள்ளார். தளபதி67 படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.