ஆட்சிக்கு வந்தால் இமாச்சல பிரதேசத்தில் உயர்தர கல்வி இலவசமாக தரப்படும் | ஆம் ஆத்மி தேர்தல் வாக்குறுதி

இமாச்சலப் பிரதேசத்தில் விரைவில் நடைபெறவுள்ள சட்டபேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் நல்ல உயர்தர கல்வி மாணவர்களுக்கு இலவசமாக தரப்படும் என ஆம் ஆத்மி கட்சியின் சார்பாக தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் வாக்குறுதி 

> 1. தில்லியில் தற்போது வழங்கப்படுவது போல உயர்தர கல்வி இலவசமாக இமாச்சலப் பிரதேசத்தில் வழங்கப்படும் என்று உறுதியளித்து உள்ளார்.

கண்டிப்பாக படிக்கவும் மேக் இந்தியா நம்பர் ஒன் திட்டம் by ஆம் ஆத்மி கட்சி 

> 2. தனியார் பள்ளிகள் தரம் முறைபடுத்தப்படும். மேலும் தனியார் பள்ளிகள் அதிகமாக கட்டணம் வசூலிக்க படாது. 

> 3. தற்போது உள்ள ஆசிரியர்களின் தகுதி, தரம் முறைபடுத்தப்படும். 

> 4. அரசு பள்ளிகளில் தற்போது காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும் என்று கூறினார்.

> 5. மேலும் அவர்களுக்கு ஆசிரியர் பணி அல்லாமல் வேறு பணி தரப்போவதில்லை என்று உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்நீதி மன்றம் தீர்ப்பு against EPS 

இது போன்ற 5 தேர்தல் வாக்குறுதிகளை இமாச்சலப் பிரதேச மக்களுக்கு ஆம் ஆத்மி கட்சி அளித்துள்ளது.

இந்த வாக்குறுதிகளை ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் சார்பாக டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த மான் ஆகியோர் சிம்லாவில் அறிவித்தனர்.

கண்டிப்பாக படிக்கவும் ஒரு குரல் புரட்சி திட்டம் வெற்றி ரகசியம் 

ஏற்கனவே ஆம் ஆத்மி கட்சி டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய இரு மாநிலங்களில் ஆட்சி செய்து வருகிறது. இமாச்சல பிரதேச தேர்தல் மூலம் அம்மாநில அரசியல் களத்தில் இறங்க முடிவு எடுத்துள்ளது.

இந்த விழாவின் போது ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்கள் அவை உறுப்பினர் சந்தீப் பதக் மற்றும் இமாச்சலப் பிரதேச தலைவர் சுர்ஜித் thaakkur உடன் இருந்தனர்.

Post a Comment

Previous Post Next Post