சென்னை : துத்துக்குடி துப்பாக்கிசூடு வழக்கில் வெளியானது நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கை. அந்த அறிக்கையில் பரிந்துரைத்த உண்மைகளையும் அறிந்து பெரும் அதிர்ச்சி அடைந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் இந்த அறிக்கையின் உண்மையை உணர்ந்து இனி மேலும் தமிழக அரசு காலம் கடத்தாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
வழக்கில் தொடர்புடைய அதிகாரிகள் அனைவரின் வேலையை விட்டு நீக்கி உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றார்.
IRCTC PLAN TO SELL PASSANGER DETAILS
இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில், ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கி சூடு சம்பவம் குறித்த அறிக்கையை நீதிபதி அருணா ஜெகதீசன் கடந்த மே மாதம் தமிழக அரசிடம் ஒப்படைத்தார்.
சுமார் 3000 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில், துத்துக்குடியில் துப்பாக்கி சூடு தேவை இல்லாமல் நடத்த பட்டதாகவும் , கலைந்து சென்ற மக்களை தேவை இல்லாமல் சுட்டதாகவும் அறிக்கை அளித்து உள்ளார் . மேலும் இந்த சம்பவத்தில் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறினார்.
என்னது இன்னைக்கு சென்னைக்கு Birthday ahh
அதிக தூரத்தில் இருந்து சுடும் எஸ்.எல். ஆர் ரக துப்பாக்கிகளை கொண்டு கான்ஸ்டபிள் சுடலைகண்ணு என்ற போலீஸ் மக்களை சுட்டு படுகொலை செய்து உள்ளார் என்று தெரிகிறது. காவல் துறை கண்காணிப்பாளர் மகேந்திரன் என்பவர் 25 வயது இளைஞர் ஒருவரை தன் கை துப்பாக்கி கொண்டு சுட்டு கொலை செய்து இருக்கிறார் என்று அருணா ஜெகதீசன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல் இந்தனை சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கும் போது ஆட்சியர் வெங்கடேஷ் எந்த ஒரு முடிவும் எடுக்காமல் சம்பவம் நடக்க துணைப்போய் இருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இத்தனை சட்டவிரோத சம்பவங்கள் துத்துக்குடியில் நடந்து இருப்பதை உணர்ந்து இனியும் தமிழக அரசு காலம் கடத்தாமல் உடனடியாக சமந்தப்பட்ட நபர்களை கைது செய்து சட்டத்தின் மூலம் தண்டனை கிடைக்க வழி செய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரும் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தி வருகின்றார்.
தென்காசி 144 தடை காரணம் இது தானா!
மேலும் இந்த சம்பவத்தில் முன்னாள் அதிமுக அரசிற்கும் ஸ்டெர்லைட் ஆலை நிறுவனத்துக்கும் தொடர்பு இருப்பதாக மறைமுகமாக தெரிய வருகிறது. அவர்களும் சட்டத்தின் முன் பதில் சொல்ல கடமை பட்டவர்கள் என்று கூறுகிறார்.