சின்னத்திரை : ராட்சசன் பிரபலம் ரவீணா தாகா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் முகம் சுளிக்க வைக்கும் கேள்விக்கு நச்சுன்னு பதில் அளித்து உள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான மெகா தொடர் மௌன ராகம் . ஏற்கனவே இதன் முதல் பாகம் மிகப்பெரிய ஹிட் ஆனது. அதனால் இதன் இரண்டாம் பாகம் வெளியிட விஜய் தொலைகாட்சி முடிவு செய்து இருந்தது. இதன் 2ஆம் பாகமும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
காதலருடன் வானில் சாகசம் செய்யும் பிரியா பாவனி சங்கர்
இந்த சின்னத்திரையில் கதாநாயகியாக முதன் முதலில் ரவீணா தாகா அறிமுகமாகி இருக்கிறார். இவர் இதற்கு முன் ஜில்லா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பின் மெகா ஹிட் திரைப்படமான ராட்சசன் படத்தின் மூலம் பிரபலமானார்.
இதன் மூலம் கிடைத்த வரவேற்பை பயன்படுத்தி சின்னத்திரையில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 17 வயதில் இந்த வாய்ப்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மதுர வீரன் பாட்டிற்கு அழகாக ஆடிய நம்ம வீட்டு பொன்னு ஹீரோயின்
இந்த சீரியலில் தன் நடிப்பு திறமையை கொண்டு ரசிகர்களை சம்பாதித்து இருக்கிறார். அதோட மட்டும் இல்லாமல் சமூக வலைத்தளங்களில் தன் நடன வீடியோ பதிவு செய்து வந்தார். இவரது நடன வீடியோ பார்க்கவே அவரை கிட்ட தட்ட 14 லட்சம் மேல் நபர்கள் அவரை ஃபாலோ செய்கிறார்கள்.
தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார். அப்போது, ரசிகர் ஒருவர் அவரிடம் , உங்கள் வீட்டுக்கு பொண்ணு பார்க்க வரலாமா என்று கேட்டு இருக்கிறார்
அதற்கு, கொஞ்சம் கூட கோபம் கொள்ளாமல் நான் பொண்ணு அல்ல , பையன் என்று கூறி அந்த ரசிகரின் கேள்விக்கு பதில் அளித்தார். இந்த பதில்லை கேட்டதும் அனைவரும் ஷாக் ஆகிவிட்டார்கள். மேலும் , தன் பதிவில் மீசை மற்றும் தாடி உடன் ஃபோட்டோ போட்டு நான் பையன் என்று கன்பார்ம் செய்து உள்ளார். இதை பல பேர் கமென்ட் செய்து வருகின்றனர்.