குமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி பாதயாத்திரை | முழு விவரம் உள்ளே

டெல்லி : காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தvஎழைலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3500 கிலோமீட்டர் 150 நாட்கள் பாதயாத்திரை செல்ல இருப்பதாக அறிக்கை வெளியாகி உள்ளது.

ராகுல் காந்தி 150 நாள் பாதயாத்திரை பயணம் 

ராகுல் காந்தி : ராகுல் காந்தயின் 150 நாள் பாதயாத்திரை பயணத்தில் 4 நாட்கள் தமிழ்நாட்டில் மேற்கொள்கிறார். பயணத்தின் முதல் நாள் வரும் செப்டம்பர் 7ஆம் நாள் கன்னியாகுமரியில் தொடங்குகிறார்.


இதன் காரணமாக செப்டம்பர் 7 நாள் மாலை ராகுல் காந்தி கன்னியாகுமரிக்கு செல்கிறார்.

முதலில் அவர் காந்தி மண்டபவம் மற்றும் காமராசர் மண்டபத்தில் அஞ்சலி செலுத்தி தன் பயணத்தை தொடங்க உள்ளார். மேலும் அங்கு நடைபெறும் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேச கலந்துகொண்டு பேசப்போகிறார்.அதன் பின் இவரின் பாதயாத்திரை குமரியில் தொடங்கி 150 ஆம் நாள் காஷ்மீரில் முடிவடைகிறது.


குமரியில் இருந்து களியக்காவிளை வழியாக கேரளாவிற்கு செல்கிறார். இந்த பாதயாத்திரை பயணத்தை குறித்து தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் மற்ற மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த ஆலோசனை விவாதத்தின் போது தொண்டர்களை அழைத்து செல்வது பாதுகாப்பு ஏற்பாடு குறித்து பேசியதாக கூறினார். மேலும் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் பத்திரிக்கையாளர்கள் இடம் பேசிய தினேஷ் குண்டுராவ் இந்த பாத யாத்திரை பயணம் ராகுல் காந்தி தலைமையில் குமரியில் தொடங்கி காஷ்மீரில் முடிவடைகிறது.


இந்த பயணம் வெற்றி அடைய வேண்டும் என்பதற்காக மற்ற மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது என்று தெரிவித்தார்.

மேலும் இந்த யாத்திரை தமிழகத்தில் 4 நாட்கள் நடக்க உள்ளது என்றும் அதன்முதல் நாள் குமரியில் தொடங்கிய பின்பு கேரளாவிற்கு செல்கிறது. 

பின்பு கேரளாவில் இருந்த தமிழக மேற்கு பகுதியான நீலகிரி மற்றும் அதை சுற்றி உள்ள பகுதியில் நடக்க உள்ளது. இந்த பயணம் கண்டிப்பாக வெற்றி அடையும் என்று தினேஷ் குண்டுராவ் கூறியுள்ளார்.


Post a Comment

Previous Post Next Post