மந்திரி பதவி கிடைக்காததால் MLA பதவியை ராஜினாமா செய்யப் போவதாக மிரட்டும் பீமா பார்தி

பீகார் :  பீகாரில் தற்பொழுது தான் தேர்தல் நடந்து முடிந்து கடந்த செவவாய்க்கிழமை நிதீஷ் குமார் தலைமையில் 31 அமைச்சர்கள் ஆளுநர் முன்பு பதவி ஏற்றனர். இந்த மந்திரி சபையில் தன் பெயர் இடம் பெறாததால் மிக அதிர்ச்சி அடைந்தார் பீகார் ஐக்கிய ஜனதா தளம் கட்சி MLA பீமா பார்தி அவர்கள்.

முன்னதாக பீகாரில் பா. ஜ. க கூட்டணியில் இருந்த நிதிஷ் குமார் அரசு தன் கூட்டணியை முறித்து கொண்டு ஆட்சியை கலைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கிய Make INDIA NUMBER 1 திட்டம் 

அதன்பின் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், லல்லு பிரசாத் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சி மற்றும் பிற கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் பீகார் மாநிலத்தை இழந்தது பா. ஜ.க அரசு. வெற்றிக்கு பின் அமைச்சர்கள் தேர்ந்தெடுப்பதில் இருந்த குழப்பத்தில் இருந்து பைனல் ஆக 31 அமைச்சர்கள் கூட்டணி கட்சி சம்மதம் தெரிவித்த பின்பு 31 அமைச்சர்கள் பதவி ஏற்றனர்.

நெல்லை கண்ணன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த முதல்வர்

இந்நிலையில் அந்த அமைச்சரவையில் தன் பெயர் இடம் பெறாததால் பீமா பார்தி மனகசப்பு கொண்டார். மேலும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி MLA லெஷி சிங் அவருக்கு 3 வது முறையாக மந்திரி பதவி கொடுக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து பீமா பார்தி பேசுகையில், லெஷி சிங் மீது கோபமாக இருப்பதாக கூறினார். நிதீஷ் குமார் தலைமையிலான அரசில் அவருக்கு மட்டும் ஏன் முன்னுரிமை கொடுக்க படுகிறது. அப்படி என்ன அவர் முதலமைச்சர் அவர்களுக்கும் கட்சிக்கும் என்ன செய்தார். அப்படி என்ன முதலமைச்சர் அவரிடம் கண்டார்? தெரியவில்லை.

மந்திரி பதவியில் இருந்து  லெஷி சிங்  அவரை நிக்கவிட்டால்  தான் தன் MLA பதவியை ராஜினாமா செய்ய போவதாக செய்தியாளர்களிடம் அறிவித்தார். இந்த செய்தியால் நிதீஷ் குமார் தலைமையிலான அரசு சற்று என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறது.

Post a Comment

Previous Post Next Post