ரஷ்யா அதிபர் புதின் புதிய அறிவிப்பு 10 குழந்தை பெற்றால் 13 லட்சம் பரிசு | இதுதான் உண்மை

மாஸ்கோ : ரஷ்ய அதிபர் புதின் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். மக்கள் தொகை குறைவினால் இந்த அறிவிப்பை அறிவித்தார் என அதிகார பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

காரணம் 

ரஷ்யா தற்போது மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி கொரானாவினால் அங்கு மக்கள் அதிகமாக பலியாகி உள்ளனர். 


மேலும் ரஷ்யா உக்ரைன் போர் கடந்த 6 மாதம் ஆகியும் இன்னும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. இந்த போரினால் ரஷ்யா பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் ரஷ்யா போர்

ரஷ்யா உக்ரைன் அரசிற்கு எதிராக கடந்த February மாதம் 24 அன்று அறிவித்தது. இதுநாள் வரையிலும் 6 மாதம் முடிந்துள்ளது. ரஷ்யா எடுத்த அனைத்து போர் முயற்சிக்கும் உக்ரைன் பதில் அடி கொடுத்து வருகிறது.

ரஷ்யா ராணுவம் தரைவழி தாக்குதல், வான்வெளி தாக்குதல், என அனைத்து தாக்குதலையும் தொடுத்தது. பதில் தாக்குதல் கொடுக்க உக்ரைன் அரசுக்கு எதிர் பார்த்த உதவி உலக நாடுகள் வழங்க வில்லை. இதன் காரணமாக உக்ரைன் தனியாக ரஷ்யா இராணுவத்தை எதிர் கொண்டது.


ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளுக்கு குடிபெயர்ந்தார்கள். நாட்டின் மீது பற்று கொண்ட மக்கள் போரில் உக்ரைன் இராணுவத்துடன் இணைந்து போரில் பங்கேற்றனர். இதனால் ரஷ்யா போரில் வெல்லும் வாய்ப்பு தாமதம் ஆனது.

மேலும், இந்த போரினால் உக்ரைன் மற்றும் ரஷ்யாவில் அதிக உயிர் இழப்பு நிகழ்ந்துள்ளது என்பது தான் உண்மை. ரஷ்யா இராணுவத்தில் மட்டும் 50 ஆயிரம் மேல் இறந்து உள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 


இந்த இழப்பு மட்டும் இன்றி தற்போது ரஷ்யா நாட்டில் மீண்டும் கொறனவால் உயிர் இழப்பு அதிகம் ஆகி உள்ளது. 

இதை கருத்தில் கொண்டு மக்கள் தொகை சரிவை சரி செய்ய ரஷ்யா அதிபர் இன்று அறிக்கை விடுத்துள்ளார்.

அதன்படி 10 அல்லது அதற்கு மேல் குழந்தைக்கு பெற்றுக்கொள்ளும் ரஷிய பெண்களுக்கு 13 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தார். 

இந்த அறிக்கையின் படி 10 வது குழந்தை பிறந்து ஒரு வயது ஆனவுடன் இந்த பரிசு தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும் தாய்க்கு சோவியத் சகாப்த விருது (தாய் நாயகி) வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

விமர்சனங்கள்

இந்த அறிவிப்பை மக்கள் பலர் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த அறிவிப்பு மிகவும் பிற்போக்குத்தனமானது என்று பலர் விமர்சித்து உள்ளார்கள். மேலும் ரஷிய அரசு கொடுக்கும் 13 லட்சம் பரிசுக்காக 10 குழந்தை பெற்று கொள்வது என்பது மிகவும் கஷ்டமானது. 


தற்போது ரஷிய அரசு உள்ள சூழ்நிலையில் இது 10 குழந்தைகளை பெற்று கொள்வது முட்டாள்கள் செய்யும் செயல் என்று கருத்து தெரிவிக்கின்றனர்.

ரஷ்யா தற்போது போரினால் மிகுந்த பொருளாதர நெருக்கடி சந்தித்துள்ளது, அரசியல் பிரச்சனை, சமூக பிரச்சனை என பல்வேறு சிக்கல்கள் உள்ள நிலையில் இது சாத்தியம் ஆகாது என்று தெரிவித்து உள்ளனர்.


Post a Comment

Previous Post Next Post