சூர்யா :
தமிழ் சினிமாவில் நேருக்கு நேர் படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகர் சூர்யா. திரைத்துறையில் தனது 25 வருடங்களை கடந்துள்ள அவர் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அதை கொண்டாடும் வகையில் அவரது ரசிகர்கள் காமன் dp புகைப்படங்களை ஷேர் செய்து வருகின்றனர்.
சமீப காலமாக நல்ல கதைக் களம் கொண்ட படங்களில் நடித்து இந்திய அளவில் பிரபலமானார். சூரரை போற்று, ஜெய் பீம் போன்ற படங்களில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். மேலும் , சூரரை போற்று படத்தில் தன் நடிப்பிற்காக தேசிய விருது வென்று உள்ளார்.
Viral ஆன நடிகர் கார்த்தியின் tweet... என்னனு தெரியுமா...
அது மட்டும் அல்லாமல் கமல்ஹாசன் விக்ரம் படத்தின் முலம் ரோலக்ஸ் கொடூர வில்லன் ஆக நடித்து மற்ற நடிகர்களுக்கு சவால் விடும் வகையில் நடித்துள்ளார். மேலும் , மாதவன் ராக்கட்ரி படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்தார்.
இவர் தற்போது சினிமாவில் 25 வருடங்களை கடந்து உள்ளதால் அவரது ரசிகர்கள் அதனை கொண்டாடி மகிழ்கின்றனர்.
இதோ , அவரின் இதுவரை பார்க்காத புகைப்படங்கள்.