சூர்யா :
நடிகர் சூர்யா பாகுபலி பிரபாஸுடன் இணைந்து நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகி கொண்டு இருக்கிறது .
நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை இயக்கத்தில் நடித்து கொண்டிருக்கிறார் . சூர்யா 42 என்று பெயரிடப்படாத இந்த படத்தில் திஷா பதானி சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் . தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார் . இந்த படத்திற்கு எவ்வளவு எதிர்பார்ப்பு இருக்குமோ அதைவிட அதிக அளவு வெற்றிமாறன் இயக்கம் வாடிவாசல் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது .
அடேய் வந்தியதேவா அண்ணனா பொறந்து நான் படுற ப்பாடு இருக்கே அய்யோ...
Project K
பிரபாஸ் நடிக்கும் project கே திரைப்படம் இயக்குநர் நாக் அஸ்வின் இயக்குகிறார் . மிக பிரமாண்டமாக உருவாகி கொண்டிருக்கும் அந்த படத்தின் பட்ஜெட் மட்டும் 500 கோடி என்று சொல்லப்படுகிறது .
அப்படியொரு பிரமாண்ட pan india திரைப்படத்தில் அனைத்து மொழி நடிகர்களையும் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை போய் கொண்டு இருக்கிறது .அதன்படி இந்தியில் அமிதா பச்சன் ,மற்றும் தீபிகா படுகோன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி கொண்டு இருக்கிறது.
இந்த 500 கோடி படத்தில் தமிழ் சினிமாவில் இருந்து நடிகர் சூர்யாவை நடிக்க வைக்க போவதாக பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இந்த தகவல் எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை . ஆனால் அப்படி நடந்தால் படம் வேற லெவல் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.