கார்த்தி நடிக்க தவறிய மெகா ஹிட் என்னனு தெரியுமா... முழு விவரம் உள்ளே

சினிமா : நடிகர் கார்த்தி நடிக்க தவறிய படம் தான் நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியான சார்பேட்டா பரம்பரை திரைப் படம். இது குறித்து அவர் பேசியது பற்றி பின்வருமாறு,

நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர். இவரது நடிப்பில் சில நாட்கள் முன் வெளிவந்த விருமன் திரைப் படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது.

Top movies in box office collection in tamil cinema from 2000 to 2020

இந்த படத்தில் ஹீரோயினாக அதிதி ஷங்கர் அறிமுகம் ஆனார். இவர் இயக்குநர் ஷங்கர் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Liger Movie Twitter Review 

மேலும் , கார்த்தி நடிப்பில் செப்டம்பர் 30 நாள் வெளியாக உள்ள படம் பொன்னியின் செல்வன், இந்த படத்தில் வந்திய தேவன் கேரக்டரில் நடித்து இருக்கிறார். பொன்னியின் செல்வனில் மேலும் விக்ரம், விக்ரம் பிரபு,ஜெயம் ரவி , திரிஷா, ஐஸ்வர்யா ராய் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்தை இயக்குநர் மணி ரத்னம் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் தயாரித்து உள்ளது. ரசிகர் மத்தியில் பொன்னியின் செல்வனுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விரைவில் நடக்க உள்ளது. 

ரசிகர்களுடன் கலந்து உரையாடிய கார்த்தி 

இந்நிலையில் , நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி 15 வருட விழாவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் கொடுத்து உள்ளார்.

ரசிகர் ஒருவர் கேட்ட கேள்வி, நீங்கள் நடிக்க தவறி ஹிட் ஆன படம் எதாவது இருக்கிறதா? என்று கேட்டார்.

அதற்கு  , கார்த்தி இருக்கு , அதான் சார்பேட்டபரம்பரை படம் எனக்கு நாட்கள் இல்லாததால் அந்த படத்தில் நடிக்க முடியவில்லை என்று கூறினார். அந்த படத்தில் நடிக்காததற்கு , நான் அந்த சமயத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்து இருந்தேன் அதனால் தான் நடிக்க இயலவில்லை என்று கூறினார் .

Post a Comment

Previous Post Next Post