சினிமா : குடும்பத்துடன் லண்டன் செட்டில் ஆக நடிகை குஷ்பு லண்டனில் புதிதாக வீடு ஒன்றை வாங்கியுள்ளார்.
தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் குஷ்பு . தமிழில் மட்டுமின்றி தென்னிந்திய சினிமாவில் இருக்கும் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.
குஷ்பு நடித்த படங்கள் :
தமிழ் சினிமாவில் 1988இல் வெளியான தர்மத்தின் தலைவன் படத்தில் பிரபுக்கு ஜோடியாக அறிமுகமாகி பின் ரஜினி,கமல், சத்யராஜ்,பாண்டியராஜன் உள்பட பல நடிகர்களுடன் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தார் .பின் தெலுங்கு ,கன்னடா உள்பட தென்னிந்திய சினிமாவில் நடிகையாக வலம் வந்தார். இவர் இதுவரை கிட்டத்தட்ட 200 படங்களில் நடித்து இருக்கிறார் .
படப்பிடிப்பில் குத்தாட்டம் போடும் அதிதி ஷங்கர்
சினிமாவில் முன்னணி இயக்குநர் சுந்தர்.சி திருமணம் செய்து கொன்டு சினிமாவில் இருந்து விலகி இருந்தார் . பின் உடல் எடை அதிகம் ஆனதால் நிட்டிசன் விமர்சனங்களுக்கு உள்ளானார் .
தற்சமயம் , இப்போதைய நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் உடல் எடையை குறைத்து உள்ளார். அவ்வப்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் தனது புகைப்படங்களை பதிவு செய்து அனைவரின் கவனத்தையும் பெற்று வருகிறார்.
தற்போது , லண்டனலில் செட்டில் ஆகும் பொருட்டு சொந்தமாக வீடு வாங்கியுள்ளார் .அந்த வீட்டில் எடுத்த முதல் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் அப்லோட் செய்து இருக்கிறார். அந்த வீடு கிட்டத்தட்ட பல கோடிகள் இருக்கும் என்று சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது .