சென்னை தினம் : பெசன்ட் நகர் beach இல் மாநகராட்சி சிறப்பு ஏற்பாடு

சென்னை : இந்த வருட சென்னை தினத்தை முன்னிட்டு பெசன்ட் நகர் கடற்கரையில் கலைநிகழ்ச்சி கொண்டாட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட உள்ளது என மாநகராட்சி தகவல் வெளியிட்டு உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 22ஆம் நாள் சென்னை தினம் கொண்டாடப்படுகிறது.இந்த வருடம் கலை நிகழ்ச்சி நடத்த பெசன்ட் நகர் கடற்கரை தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு 383 சென்னை தினத்தை முன்னிட்டு 2 நாள் கொண்டாட சென்னை மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி பாதயாத்திரை

கலைநிகழ்ச்சிகள் வரும் சனிக்கிழமை மாலை முதல் ஞாயிறு நள்ளிரவு வரை பல கலைநிகழ்ச்சி நடக்க உள்ளது. இதனையொட்டி நடக்க உள்ள ஓவியம் உள்ளிட்ட போட்டிகளில் மக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.

மேலும் ஆகஸ்ட் 22 அன்று ஓவியப் போட்டி, குறும்படம் போட்டி, ரீல்ஷ் போட்டி போன்றவை நடக்க உள்ளது. இதை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி கொள்ளுமாறு சென்னை மாநகராட்சி கேட்டு கொள்கிறது 

தென்காசி 144 தடை அப்படி என்ன நடந்தது

மேலும் ஒவ்வொரு போட்டிகளுக்கு தனி தனியாக தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஓவிய போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தேசிய கொடியை தலைப்பாக வைத்து தங்களது ஓவியங்களை அனுப்பலாம்.

சென்னை பண்பாடு மட்டும் பாரம்பரியம் என்ற தலைப்பில் புகைப்படங்களை எடுத்து அனுப்புங்கள். சிறந்த படங்கள் சமூக வலைதளத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்பில் மகேஷ் புதிய திட்டம்

மேலும் அதே தலைப்பில் சமூக வலைதள ரீல்ஸ் எடுத்து அனுப்பலாம் என்று தெரிவித்து கொண்டது. குறும்பட போட்டியில் கலந்து கொள்பவர்கள் சென்னை என்ற தலைப்பில் படங்களை எடுக்க வேண்டும்.

இணையத்தில் தங்களது படைப்புகளை பதிவேற்றம் செய்யலாம் என்று சென்னை மாநகராட்சி சார்பில் அறிக்கை விடுக்க பட்டு உள்ளது .


Post a Comment

Previous Post Next Post