பயணிகளின் தரவுகளை விற்று பணமாக மாற்றும் IRCTC | ரூ1000 கோடி இலக்கு காரணம் இதோ!

சென்னை : இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் கீழ் உள்ள IRCTC நிறுவனம் பயணிகளின் தரவுகளை பணமாக மாற்ற முடிவு எடுத்துள்ளது. இதற்கான டெண்டர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

IRCTC எனப்படும் இந்திய ரயில்வே நிறுவனம் மத்திய ரயில்வே மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சரகத்தின் கீழ் உள்ளது. இந்திய ரயில்வே துறை உலகின் நான்காவது மிக பெரிய ரயில்வே நிறுவனம் ஆகும். இந்திய ரயில்வே நாடு முழுவதும் கிட்டத்தட்ட  67,956 கிமீ தொலைவு ரயில்வே பாதையை உள்ளடக்கியது.

சென்னை Birthday party full details 

இவ்வளவு மாபெரும் நிறுவனம் பயணிகளுக்கு தேவையான  பயண சீட்டுகளை தங்கள் இணைய தளமான IRCTC மூலம் பெற்று கொள்ளலாம். இதற்கு பயணிகள் தங்கள் தரவுகளை IRCTC இணைய தளத்தில் பதிவு ஏற்றம் செய்து தங்களுக்கான IRCTC account புதிதாக உருவாக்கி கொள்ளலாம்.

ராகுல் காந்தி பாத யாத்திரை 

இதற்கு பயணிகள் தங்கள் தரவுகளான பெயர்,முகவரி, பிறந்த தேதி, மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண், ஆகியவற்றின் மூலம் தங்களுக்கான பயணசீட்டை பெற்று கொள்ளலாம். அது மட்டும் இல்லாமல் பயணிகள் தங்கள் ஆதார் எண் மூலமாகவும் பதிவு செய்து கொள்ளலாம்.

IRCTC இணைய தளத்தில் ரயில்வே முன்பதிவு மட்டுமின்றி விமான பயணச்சீட்டு, தங்கும் விடுதிகள், மற்றும் பல பயன்பாடு கொண்டுள்ளது .

இந்த காரணத்தால் இந்தியாவில் 90 சதவீதம் பயணிகள் இதன் மூலம் முன்பதிவு செய்கின்றனர். IRCTC இணைய தளம் மூலம் சேகரிக்க பட்ட பயணிகளின் தரவுகளை பணமாக மாற்ற முடிவு எடுத்துள்ளது. அதற்கான உரிய திட்டம் மட்டும் டெண்டர் விரைவில் வெளியாகும் என்று ரயில்வே மற்றும் சுற்றுலா கழகம் கூறியுள்ளது.

அரசு பள்ளிகளில் புதிய வேலை அன்பில் மகேஷ் அறிவிப்பு

இதற்கு appointment of Consultant for Digital Data Monetization of Indian Railway/IRCTC என்ற பெயரில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. இந்த டெண்டர் மூலம் அதற்கான ஆலோசர்கள் நியமிக்க படுவர்கள். இந்த ஆலோசர்கள் இந்தியாவில் உள்ள மற்ற ரயில்வே சம்பத்தப்பட்ட இணையதளத்தில் உள்ள தரவுகள் மூலம் ரூ 1000கோடி வருவாய் ஈட்ட முடிவு செய்து உள்ளது.

இது ஒரு புறம் இருக்க மக்கள் தர்வுகள் விற்று பணமாக மாற்றும் இந்த திட்டம் மிக மோசமானது என்று கருத்து வெளியாகி உள்ளது.

Post a Comment

Previous Post Next Post