சின்னத்திரை : விஜய் டிவியில் ஒளிரப்பாகும் ராஜா ராணி சீசன் 2 சீரியல் முன்னணி நடிகர்கள் விலகியதால் விரைவில் முடிய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ராஜா ராணி :
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெகாதொடர் ராஜா ராணி. இந்த சீரியல் முதல் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதன் காரணமாக இதன் இரண்டாம் பாகம் ஒளிபரப்பு செய்ய நிறுவனம் முடிவு எடுத்த பின் அதன் 2ம் பாகம் முதலில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அப்படி சொல்லி கொள்ளும் அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை .
சில வாரங்களுக்கு முன்னர் தான் இதன் 500 எபிசோட் வெற்றி விழா கொண்டாடப்பட்டது. ஆனாலும், கதை கொஞ்சம் டல் அடிக்க ஆரம்பித்து விட்டது. இதன் காரணமாக TRP RATING குறைய ஆரம்பித்தது. அது மட்டும் இல்லாமல் முன்னணி நடிகர்கள் விலகியதும் ஒரு காரணம்.
நடிகை சாக்ஷி அகர்வால் நியூ ரீல்ஸ் நீங்களே பாருங்க...
நடிகர்கள் விலகல்:
முதலில் இந்த சீரியலில் ராஜா ராணி fame ஆலியா மானசா சந்தியா ரோலில் நடித்து வந்தார். இவர் சின்னத்திரையில் அறிமுகமான முதல் சீரியல் ராஜா ராணி சீசன் 1 என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் சஞ்சீவ் ஜோடியாக நடித்து வந்தார். ராஜா ராணி சீசன் 1 பிறகு இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். அதன் பின் சின்னத்திரையில் ஆலியா மானஸா நடிக்க போவதில்லை என்று தகவல் வெளியானது.
அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் ராஜா ராணி சீசன் 2 மீண்டும் re-entry கொடுத்தார். இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக திருமணம் சீரியல் புகழ் சித்து விஜய் டிவியில் முதன் முதலாக அறிமுகம் ஆனார்.
பின் ஆல்ய தன் பிரசவத்தின் காரணமாக இந்த சீரியலில் இருந்து விலகினார். பின் சந்தியா ரோலில் நடிக்க ரியா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவர் தான் தற்பொழுது சந்தியா ரோலில் நடித்து வருகிறார்.
சில நாட்களுக்கு முன் இந்த சீரியலில் வில்லியாக நடித்து கொண்டிருந்த அர்ச்சனா விலகுவதாக அறிவித்தார். இதை அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இப்போது அவரது ரோலில் வேறொரு நடிகை நடித்து வருகிறார் .
விரைவில் ஹீரோ சித்துவும் விலக போவதாக தகவல்கள் வெளியாகி கொண்டு இருக்கிறது. அவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் சீரியலில் இருந்து விலக போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அவரும் வெளியேறும் சமயத்தில் இந்த சீரியல் விரைவில் முடிய வாய்ப்பு அதிகம் உள்ளதாக கருதப்படுகிறது. ஏற்கனவே trp யில் rating குறைந்து போனது மற்றும் முக்கிய நடிகர்கள் விலகியதால் இந்த சீரியலை விஜய் டிவியே கேன்சல் செய்ய அதிகம் வாய்ப்பு இருக்கிறது.
Tags
Television