இயக்குநர் லிங்கசாமிக்கு 6 மாதம் சிறைத்தண்டனை...! சைதாப்பேட்டை நீதி மன்றம் அதிரடி உத்தரவு ..! முழு விவரம் உள்ளே

சினிமா : செக் மோசடி வழக்கில் குற்றவாளியான டைரக்டர் லிங்குசாமிக்கு சைதாப்பேட்டை நீதி மன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியது.

தமிழ் சினிமாவில் முன்னணி டைரக்டர்களில் ஒருவராக வலம் வந்தவர் டைரக்டர் லிங்குசாமி. இவர் பிரபல முன்னனி இயக்குநர் விக்ரமன் அவர்களிடம் உதவி இயக்குநராக பணயாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

லிங்குசாமி படங்கள்

இவரின் இயக்கத்தில் மம்முட்டி, முரளி,அப்பாஸ், தேவயானி,ரம்பா, சினேகா ஆகியோர் நடிப்பில் வெளியான படம் குடும்பங்கள் கொண்டாடிய படம் ஆனந்தம். இந்த படம் கடந்த 2001 ஆம் ஆண்டில் வெளிவந்து மிகப்பெரிய அளவில் வெற்றயடைந்தது. இதுவே இவரின் முதல் படம். முதல் படத்திலேயே மிகப்பெரிய டைரக்டர் என்ற அளவில் பேசப்பட்டவர்.

அடுத்து இவரின் இயக்கத்தில் மாதவன், மீரா ஜாஸ்மின் நடித்து வெளியான படம் ரன். இந்த படத்திலும் மக்களின் வரவேற்பை பெற்றார். இதற்கு பின் அஜித் நடிப்பில் ஜீ, மற்றும் விஷால் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட் ஆன படம் சண்ட கோழி , பின் கார்த்தியை வைத்து பையா படம் எடுத்தார். இதுவே இவரின் இயக்கதில் வெளியாகி ஹிட் ஆன கடைசி திரைப்படம்.

இதற்கு பின் சூர்யா ஹீரோவாக நடித்து வெளியான படம் அஞ்சான் .இந்த படத்தில் பல விமர்சனங்களை அவர் சந்தித்தார். ரசிகர்களை இவரை வைத்து memes போட்டு troll செய்ய ஆரம்பித்தார்கள். இதனால் சில வருடம் இயக்கத்தில் இருந்து விலகி இருந்தார். 


பின் விஷாலை வைத்து சண்ட கோழி 2 படத்தை இயக்கினார். அதும் எதிர்பார்த்த அளவிற்கு போகவில்லை. இதனால தமிழ் சினிமாவில் இருந்து விலகி தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிற ராம் போத்தேனி வைத்து இவர் இயக்கி வெளியான படம் வாரியர். 

இந்த படத்தில் ஹீரோயினாக கீர்த்தி ஷெட்டி நடித்து இருந்தார். புல்லட் பாட்டு மூலம் சமூக வலைத்தளத்தில் தேசிய அளவில் ட்ரெண்ட் ஆன இந்த படமும் சுமாரான வெற்றியைப் பெற்றது.

செக் மோசடி வழக்கு 

இவ்வளவு பிரபலமான இவர் செக் மோசடி வழக்கில் குற்றவாளியான இவருக்கு 6 மாதம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது சைதாப்பேட்டை நீதி மன்றம். 

காரணம் என்னவென்றால், கார்த்தி, சமந்தா இவர்களை வைத்து இவர் ஒரு படம் இயக்க திட்டமிட்டமிருந்தார். அந்த படத்திற்க்கு எண்ணி ஏழு நாள் என்ற பெயர் சூட்டப்பட்டது என்று கூறப்படுகிறது . இந்த படத்திற்காக பிவிபி கேப்பிடல் என்ற நிறுவனத்தில் ரூபாய் 1.03 கோடி வாங்கி உள்ளார். 


அந்நிறுவனம் லிங்குசாமியிடம் கடனை திருப்பி கேட்டப் போது அவர் செக் கொடுத்துள்ளார். அந்த செக்கை பேங்கில் செலுத்திய போது அந்த செக் பணம் இல்லாமல் பவுன்ஸ் ஆகி உள்ளது.

இதனால் அவர்மீது தொடரப்பட்ட செக் மோசடி வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டது.  இந்த வழக்கின் தீர்ப்பை சைதாப்பேட்டை நீதி மன்றம் இன்று வழங்கியது. அந்த தீர்ப்பில் அவர்க்கு 6 மாதம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 

இதனால் சினிமா வட்டாரங்கள் அதிர்ச்சியில்  உறைந்து போய் விட்டன.

Post a Comment

Previous Post Next Post