Top movies in box office collection in Tamil cinema from 2000 to 2020
சினிமா : தமிழ் சினிமாவில் 2000 முதல் 2020 வரை பாக்ஸ் ஆபிஸ் கலெக்சனில் நம்பர் 1 இடம் பிடித்த படங்கள் மற்றும் அந்த படங்கள் எவ்வளவு வசூல் சாதனையை நிகழ்த்தியது என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
1. குஷி (2000) :
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ள தளபதி விஜய் மற்றும் ஜோதிகா ஆகியோர் நடிப்பில் வெளியான காமெடி, ரொமான்ஸ், டிராமா கலந்த படம் குஷி . இந்த படத்தை இயக்குநர் மற்றும் நடிகரும் ஆன S. J. சூர்யா இயக்கினார். இந்த படம் திரையில் வெளியாகி 175 நாட்களுக்கு மேல் ஓடி 2000 ஆண்டின் block buster மூவி என்ற இடத்தை பிடித்தது. இந்த படம் உலகம் முழுவதும் மொத்தமாக 51 கோடி ரூபாய் வசூல் வேட்டை நடத்தியது.
IMDB RATING : 7.9
World wide Collection : 51 crore
Thiruchitrambalam படத்தின் மொத்த வசூல்
2 . தீனா (2001)
தமிழ் மற்றொரு முன்னணி ஹீரோவாக உள்ள நடிகர் அஜீத் குமார், சுரேஷ் கோபி மற்றும் லைலா ஆகியோர் நடிப்பில் வெளியான ஆக்சன் டிராமா படம் தீனா. இந்த படத்தில் மூலம் நடிகர் அஜித் ஒரு மாஸ் ஹீரோவாக மாறினார். அவரது சினிமா வாழ்க்கையில் முக்கியமான படமான இந்த படத்தை இயக்குநர் A R முருகதாஸ் இயக்கி உள்ளார். இது அவரின் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் உலகம் முழுவதும் 25 கோடி ரூபாய் வசூல் செய்து உள்ளது.
IMDB RATING : 7.1
World wide Collection : 25 crore
Vijay devarakonda Liger Movie Twitter Review
3 . பாபா (2002)
படையப்பா என்ற மாபெரும் வெற்றிக்கு பிறகு சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான ஆக்சன், ஃபேண்டஸி படம் தான் பாபா. இந்த படத்தை நடிகர் ரஜினி திரைக்கதை எழுதி தயாரித்து நடித்த படம் ஆகும். மேலும் இந்த படத்தின் கதையும் ரஜினி எழுதினார். நடிகர் ரஜினி சொந்த கதையான இந்த படத்தை இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார். இந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை என்றாலும் வசூலில் அந்த வருடம் வந்த மற்ற படங்களை பின்னுக்கு தள்ளியது.
IMDB RATING : 5.3
World wide Collection : 41.5 crore
4 . சாமி (2003)
இயக்குநர் ஹரி இயக்கத்தில் சியான் விக்ரம், திரிஷா ஆகியோர் நடிப்பில் வெளியான ஆக்சன் டிராமா படம் சாமி . இதில் விக்ரம் போலீசாக நடித்து அனைவரின் பாராட்டு பெற்றார். இந்த படம் திரையில் 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. விக்ரம் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படத்தில் இதும் ஒன்று.
IMDB RATING : 7.3
World wide Collection : 35 crore
5 . கில்லி (2004)
இயக்குநர் தரணி இயக்கத்தில் தளபதி விஜய், திரிஷா, பிரகாஷ் ராஜ் ஆகியோர்களின் சிறந்த நடிப்பில் ஆக்சன் ரொமான்ஸ் கலந்து வெளியான படம் கில்லி. தளபதி விஜய்க்கு மாஸ் ஹீரோ அந்தஸ்து வாங்கி தந்த படம் இது தான். இந்த படத்திற்க்கு பிறகு தளபதி விஜய்க்கு ரசிகர் பட்டாளம் அதிகரிக்க தொடங்கியது . அதுபோல பிரகாஷ் ராஜ்க்கு தமிழ் சினிமாவில் அழியா புகழ் பெற்று தந்த படம் இது. இந்த படம் திரையில் 175 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது.
IMDB RATING : 8.1
World wide Collection : 50 crore
Lokesh LCU UNIVERSE UPDATES
6 . சந்திரமுகி (2005)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரபு,ஜோதிகா, நயன்தாரா ஆகியோர் நடிப்பில் ஆக்சன் திரில்லர் கலந்து வெளியான படம் சந்திரமுகி. இந்த படத்தை p. வாசு இயக்கினார். திரையில் வெளியாகி ஒரு வருடங்களுக்கு மேல் ஓடிய திரைப்படமாகும். சந்திரமுகி ஆக ஜோதிகா நடிப்பு அனைவரையும் பயம் கொள்ள செய்தது. ரஜினி நடிப்பில் 2005 வரை அதிக வசூல் செய்த படம் இதுவாகும்.
IMDB RATING : 7.2
World wide Collection : 89 crore
7 . வேட்டையாடு விளையாடு (2006)
கெளதம் வாசதேவ் மேனன் இயக்கத்தில் முதன் முறையாக உலக நாயகன் கமல்ஹாசன், ஜோதிகா,பிரகாஷ் ராஜ்,டேனியல் பாலாஜி ஆகியோரின் மிரட்டலான நடிப்பில் திரில்லர் திரைப்படம் வேட்டையாடு விளையாடு. இதில் போலீஸ் அதிகாரி ராகவன் ஆக கமல் தன் நடிப்பில் உண்மையான போலீஸ் அதிகாரி போல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. டேனியல் பாலாஜி இந்த படத்தில் கொடூரமான வில்லனாக நடித்து இருந்தார். கமல் நடித்த போலீஸ் கதாபாத்திரத்தில் இந்த படம் வித்தியாசமானது.
IMDB RATING : 7.9
World wide Collection : 60 crore
8 . சிவாஜி (2007)
வெற்றி பட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஸ்ரேயா சரண், விவேக் ஆகியோர் நடிப்பில் வெளியான ஆக்சன் படம் சிவாஜி, சமூக விரோதமாக கருப்பு பணம் வைத்து இருப்பவர்களிடம் உள்ள பணத்தை மக்களுக்கு பயன்படும் வகையில் மாற்றுவது தான் இந்த படத்தின் கதை. எப்படி கருப்பு பணத்தை மக்களிடம் ரஜினி கொண்டு போய் சேர்க்கிறார் என்பதில் தான் கதையின் சிறப்பு அம்சம். இந்த படம் தமிழ் சினிமாவை இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தது.
IMDB RATING : 7.5
World wide Collection : 154 crore
Indian 2 update shooting begins
9 . தசாவதாரம் (2008)
உலக நாயகன் கமல்ஹாசன் எழுத்தில் இயக்குநர் k.s ரவி குமார் இயக்கத்தில் கமல், அசின் ஆகியோர் நடிப்பில் வெளியான ஆக்சன் படம் தசாவதாரம். இந்த படத்தில் கமல்ஹாசன் வித்தியாசமான 10 வேடத்தில் நடித்து நடிப்பின் நாயகனாக உச்சம் பெற்றார். 10 கேரக்டருக்காக பத்து வித்தியாசமான உருவ அமைப்பில் வேறுவேறு குரலில் பேசி நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் நடிப்பு மற்றும் இயக்குனரின் மேஜிக் போன்றவற்றால் இந்த படம் மிகப் பெரிய அளவில் ஹிட் ஆனது.
IMDB RATING : 7.2
World wide Collection : 105 crore
10 . அயன் (2009)
நடிகர் சூர்யாவின் மிரட்டலான நடிப்பில் வெளியான ஆக்சன் கலந்த டிராமா படம் அயன். இதில் முதன்முதலாக சூர்யாவுக்கு ஜோடியாக தமன்னா நடித்து இருந்தார். மேலும் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிகர் பிரபு நடித்திருந்தார் முழக்க முழுக்க சுவாரஸ்யம் நிறைந்த இந்த படத்தை இயக்குநர் கே . வி. ஆனந்த் இயக்கினார். இவர் தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளர் ஆக அறிமுகம் ஆகி இயக்குநராக மாறியவர். மாபெரும் வெற்றி அடைந்த இந்த படத்தை சன் பிக்சரஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.
IMDB RATING : 7.5
World wide Collection : 80 crore
11 . எந்திரன் (2010)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இருவரும் இணைந்து சிவாஜிக்கு பிறகு இரண்டாவது முறையாக வெளிவந்த படம் எந்திரன். இதில் சூப்பர் ஸ்டார் ஜோடியாக ஐஷ்வர்யா ராய் பச்சன் நடித்து இருந்தார். இது இந்திய சினிமாவை மேலும் ஒரு கட்டத்துக்கு எடுத்துச் சென்றது . உலக அளவில் அனைவரது பாராட்டுகளையும் பெற்ற இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. தமிழ் சினிமாவில் 200 கோடிக்கு மேல் வசூல் செய்த முதல் படம் என்கிற பெயரை பெற்றது.
IMDB RATING : 7.1
World wide Collection : 290 crore
12 . 7 ஆம் அறிவு (2011)
சூர்யா நடிப்பில் வெளியான இந்த படம் சரித்திர புகழ் பெற்ற போதி தர்மர் கதையை தழுவி எடுக்கப்பட்டது. இந்த படத்தை இயக்குநர் A.R. முருகதாஸ் டைரக்டர் செய்து இருந்தார். இவர்கள் இருவரும் இணையும் இரண்டாவது திரைப்படான இது ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் கிடைத்தது. மேலும், தமிழ் வரலாற்றை உலகுக்கு அறிமுகம் செய்தது. இந்த படத்தில் ஹீரோயினாக முதன் முதலில் சுருதிஹாசன் அறிமுகமானார்.
IMDB RATING : 6.5
World wide Collection : 109 crore
13 . துப்பாக்கி (2012)
தளபதி விஜய் பிரமாண்ட நடிப்பில் வெளியான படம் துப்பாக்கி. ஒரு இராணுவ DIA AGENT ஆக தளபதி மிகசிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த படத்தை A.R.முருகதாஸ் இயக்கினார். இவர்கள் இணையும் முதல் படம் இது. ஆனால் தளபதி விஜய்க்கு இந்திய அளவில் ரசிகர்களை உருக்கவாக்கிய படம் துப்பாக்கி. இந்த படத்தில் ஹீரோயினாக காஜல் அகர்வால் நடித்து இருந்தார். மேலும் , கூகுள் கூகுள் பாடல் உலகம் முழுவதும் ஹிட் ஆனது .
IMDB RATING : 8
World wide Collection : 187 crore
14 . விஸ்வரூபம் (2013)
உலக நாயகன் கமல் இயக்கி நடித்து தயாரித்த இத்திரைப்படத்தில் அன்ட்ரியா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படம் பல போராட்டங்களுக்கு பின் வெளியாகி மிக பெரிய அளவில் வெற்றி பெற்றது. இது முழுக்க முழுக்க ஹாலிவுட் ஸ்டைலில் கமல் இயக்கி இருந்தார். இவரின் வித்தியாசமான நடிப்பில் வெளியான படத்தில் இதுவும் ஒன்று.
IMDB RATING : 7.9
World wide Collection : 220 crore
15 . கத்தி (2014)

A.R.முருகதாஸும் தளபதி விஜய் இருவரும் இணையும் இரண்டாவது பெரிய படம் கத்தி. இதில் விஜய் 2 douple ஆக்சனில் நடித்து இருந்தார். விவசாயிகள் தற்கொலை முதன்மை படுத்தி வெளிவந்த இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. அது மட்டுமின்றி அனிருத் இசையும் கூடுதல் பலம். இந்த படத்தில் ஹீரோயினாக சமந்தா முதன் முதலில் விஜயுடன் ஜோடியானார்.
IMDB RATING : 8
World wide Collection : 164 crore
16 . I (2015)
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்து இரண்டாவது முறையாக வெளிவந்த படம் ஐ. மாபெரும் பொருள் செலவில் வெளியான இந்த படம் ரசிகர்களின் மனதில் ஓரளவு இடம் கிடைத்தது. ஆனாலும் வசூலில் 2015ல் மற்ற படங்களின் சாதனையை முறியடித்தது. இதில் ஹீரோயின் ஆக எமி ஜாக்சன் நடித்து இருந்தார்.
IMDB RATING : 7.3
World wide Collection : 240 crore
17 . கபாலி (2016)
இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, மற்றும் பலர் நடிப்பில் மிகப் பிரமாண்டமாக வெளி வந்த திரைப்படம் கபாலி. வெகு நாட்களுக்கு பிறகு ரஜினியின் எதிர்த்த நடிப்பில் வெளியான படம் கபாலி. சந்தோஷ் நாராயணன் இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடந்து வரும் ஓபனிங் சீன் மாபெரும் ஹிட் ஆக்கியது. இந்த படத்தில் மலேஷியா டான் ஆக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
IMDB RATING : 6.1
World wide Collection : 295 crore
18 . மெர்சல் (2017)
இயக்குநர் அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான படம் மெர்சல். இந்த படத்தில் 3 வேடங்களில் நடித்து இருந்தார் விஜய். மேலும் அவருக்கு சமந்தா, நித்யா மேனன், காஜல் அகர்வால் ஆகியோர் ஜோடியாக நடித்து இருந்தார்கள். காஜல் மற்றும் சமந்தாவுடன் இணையும் 3 படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்க்கு இசைப்புயல் A.R. ரஹ்மான் இசை அமைத்து இருந்தார் .
IMDB RATING : 7.5
World wide Collection : 260 crore
19 . 2.0 (2018)
இயக்குநர் ஷங்கர் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மூன்றாவது முறையாக இணைந்து உருவான படம் 2.0 . இந்த படம் எந்திரன் படத்தின் தொடர்ச்சியாக வெளியானது. இந்த படத்தில் வில்லனாக அக்ஷய்குமார் நடித்து இருந்தார். ஹீரோயின் ரோபோ வாக எமி ஜாக்சன் நடித்து இருந்தார். இந்த படம் தமிழ் சினிமாவின் அனைத்து வசூல் சாதனையும் முறியடித்தது .
IMDB RATING : 6.1
World wide Collection : 850 crore
20 . பிகில் (2019)
தளபதி விஜய் மற்றும் இயக்குநர் அட்லீ ஆகியோர் உழைப்பில் வெளியான இந்த படம் இவர்கள் இருவரும் இணையும் 3 படம் ஆகும். AR RAHMAN இசையில் புட்பால் கோச் மற்றும் லோக்கல் டான் ஆக விஜய் நடிப்பில் கலக்கி இருந்தார். இந்த படத்திற்கு வெகு நாட்களுக்கு பின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.
IMDB RATING : 6.7
World wide Collection : 310 crore
21 . தர்பார் (2020)
இயக்குநர் AR முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் தர்பார். ரஜினி வெகு நாட்களுக்கு பின் போலீஸ் அதிகாரியாக நடித்து இருந்தார். நயன்தாரா ஜோடியாக நடித்து இருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெறவில்லை என்றாலும் வசூலில் சாதனை படைத்தது.
IMDB RATING : 6
World wide Collection : 247 crore