இந்தியாவில் 2030 ஆம் ஆண்டிற்குள் விமான நிலையங்களின் எண்ணிக்கை 220ஆக உயரும் என மத்திய அரசின் அதிகார பூர்வ தகவல்

கடந்த 2013ஆம் ஆண்டு இந்தியாவில் இயக்கப்பட்ட விமானங்களின் எண்ணிக்கையை விட 2021-22ம் ஆண்டுகளில் 300 அதிகரித்து சென்ற ஆண்டு 700 விமானங்கள் பறந்தது.  

இந்த எண்ணிக்கை 2027 ஆண்டிற்குள்  விமானங்களின் எண்ணிக்கை 1200 ஆக உயரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

மேலும், விமான பயணிகளின் எண்ணிக்கை 40 கோடியாக உயரும் என்று மத்திய அரசின் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார். 

Breaking News must read 

விமான நிலையங்களின் எண்ணிக்கையை 220 ஆக 2030குள் உயர்த்துவது தான் மத்திய அரசின் குறிக்கோள் என்று அறிக்கை அளித்து உள்ளார்.


இனிவரும் ஆண்டுகளில் விமானங்களின் எண்ணிக்கை 15 சதவீதம் என்ற அளவில் 100 முதல் 110 ஆக அதிகரிக்க இலக்கு வைத்துள்ளோம் என்று ஜோதி ராதித்ய சிந்தியா கூறினார்.

காணொளி காட்சி மூலம் இந்தியாவில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஆகாஷா ஏர் என்ற நிறுவனத்தை தொடங்கி வைத்தார். முதல் ஆகாஷா ஏர் விமானம் மும்பையில் இருந்து அகமதாபாத் சென்றது.

இந்தியாவில் புதிதாக விமான போககுவரத்து நிறுவனம் தொடங்கி 7 ஆண்டு என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

Previous Post Next Post