பள்ளி வளாகத்தை மாணவர்கள் சுத்தம் செய்ய கூடாது | பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு

சென்னை : பள்ளி வளாகத்தை சுத்தம் செய்ய அங்குப் படிக்கும் மாணவ, மாணவிகளை  பயன்படுத்த பள்ளி நிர்வாகம் முயலுதல் கூடாது என்று பள்ளிக் கல்வித் துறை சார்பாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளி வளாகத்தை சுத்தம் செய்ய கிராமப்புற பகுதிகளில் உள்ள 100 நாட்கள் வேலையாட்களை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் மதுரை முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறி இருந்தது என்னவென்றால் இனி வாரம் ஒருமுறை வியாழன் அன்று காலையில் பள்ளி ஆசிரியர்கள தலைமையில் 6 முதல் 8 படிக்கும் மாணவர்களை பயன்படுத்தி பள்ளி வளாகத்தை சுத்தம் செய்ய வைக்க வேண்டும் என்றும், இதன் மூலம் மாணவ, மாணவிகள் தங்கள் சுற்றுப்புறத்தை தாமே முன்வந்து சுத்தமாக வைத்துக் கொள்ளும் பண்பு மாணவர்கள் மனதில் வளரும் என்று கூறப்பட்டது.

வங்க கடலில் புதிய புயல் வானிலை ஆய்வு மையம் தகவல்

மேலும் , இந்த அறிக்கையில் பள்ளி வளாகத்தை மாணவ மாணவிகள் சுத்தம் செய்யும் புகைப்படங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலக இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதை பின்பற்ற தவறும் பள்ளிக்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டது.

இதனால் மாணவ மாணவிகள் சுத்தம் செய்யும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியானது. அதில் மாணவ, மாணவிகள் கழிப்பறை சுத்தம் செய்தல் மற்றும் தண்ணீர் சுமந்து கொண்டு வந்து வகுப்பறையில் வைப்பது போன்ற புகைப்படங்கள் வெளியானது.

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவம் 3000 பக்க அறிக்கை வெளியானது

இதை கண்டு பெற்றோர்கள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு அமைப்புகள் இது மிக கொடுமையானது . இதை உடனடியாக அரசு தலையிட்டு மாணவர்களின் நலம் காக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன.

இதை விசாரித்த பள்ளிக்கல்வித்துறை இனி பள்ளி வளாகத்தை சுத்தம் செய்ய மாணவ, மாணவிகளை பயன்படுத்த கூடாது அறிவித்தது. மேலும், பள்ளி வளாகத்தை சுத்தம் செய்ய கிராமப் புறங்களில் உள்ள 100 நாட்கள் பணியாட்களைப் பயன்படுத்தி கொள்ளலாம் என்று அறிவித்தது.

100 நாட்கள் வேலைவாய்ப்பு திட்டம்

இந்த திட்டம் மகாத்மாகாந்தி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் என்ற பெயரில் கடந்த 2005ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இதன்படி இந்த திட்டத்தில் இணைந்து கொள்ளும் மக்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் ஊரக பகுதிகளில் வேலைவாய்ப்பு வழங்கப்படும். அவர்களுக்கான ஊதியம் 100 சதவீதத்தில் 75 % மத்திய அரசும் 25 % மாநில அரசும் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த திட்டம் அறிமுகம் ஆன அன்று கிராமப்புறங்களில் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்கள். காரணம் என்னவென்றால் தமிழகத்தில் மட்டும் இல்லாமல் இந்திய கிராமப் புறங்களில் மழை பொய்த்து போன ஆண்டுகளில் கிராமப்புற மக்களுக்கு வாழ்வாதாரம் இந்த திட்டத்தின் மூலம் சாத்தியமானது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post