பாம்பன் துறைமுகத்தில் 1ம் புயல் கூண்டு எச்சரிக்கை | வங்க கடலில் உருவான புயல்

இராமேஸ்வரம் : வங்க கடலில் புதிய புயல் உருவாகி உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இராமேஸ்வரம் பாம்பன் துறைமுக அழுவலகத்தில் 1ஆம் எண் புயல் கூண்டு எச்சரிக்கை ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று மீனவர்களுக்கு மீன் பிடிக்க அனுபதிச்சீட்டு வழங்கப்படவில்லை. 

இதனால் மீனவர்கள் மற்றும் விசை படகு உரிமையாளர்கள் போராட்டத்தில் இறங்கினர்.

ஸ்டெர்லைட் ஷுட்டிங் அறிக்கை தொல்.திருமா கருத்து

இந்த புயல் குறித்து வானிலை ஆய்வு மையம் அளித்த தகவலின் படி வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயல் சின்னமாக மாறி, ஒடிசா பாலசோர் துறைமுகத்தில் இருந்து தென் கிழக்கில் 310 கி.மீ. தொலைவிலும், மேற்குவங்கம் திகா துறைமுகத்தில் இருந்து தென் கிழக்கில் 250 கி.மீ.தொலைவிலும், சாகர் தீவு தென் கிழக்கில் 210 கி.மீ.தொலைவிலும் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மைய தகவல்கள் வெளியாகி உள்ளது.

IRCTC PLAN TO SELL PASSANGER DETAILS TO MAKE 1000 Crore 

வடமேற்கு மற்றும் வட கிழக்கு பகுதியில் உருவான இந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலம் காரணத்தால் கடலோர மாவட்டங்களில் மிதமனது முதல் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

அது மட்டும் இன்று கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு உள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான இந்த இந்த புயலால் இன்றும் நாளையும் தமிழகத்தில் உள்ள கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் மணிக்கு 40 முதல் 60கி. மீ வரை வீசும் என்று தெரிவித்துள்ளது. இந்த காரணத்தால் தமிழக மீனவர்கள் இன்றும் நாளையும் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

383வாது சென்னை பிறந்த நாள்

வானிலை ஆய்வு மையம் வெளிட்ட இந்த எச்சரிக்கையால் தமிழகத்தில் உள்ள அனைத்து  துறைமுகத்தில் 1ம் எண் புயல் கூண்டு எச்சரிக்கை ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாகத்தான் பாம்பன் துறைமுகத்தில் புயல் கூண்டு எச்சரிக்கை ஏற்பட்டுள்ளது என பாம்பன் துறைமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த புயலால் தமிழகம் மற்றும் புதச்சேரியில் கடலோர பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. உள் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post