சாட்டிலைட் நகரங்களாக மாறும் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் | 65 கிராமம் இணைப்பு

சென்னை : சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம், சென்னை அருகே இரண்டு சாக்லேட் சாட்டிலைட் நகரங்களை உருவாக்க திட்டமிட்டு இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை அருகில் உள்ள காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டத்தை சேர்ந்த 65 கிராமங்கள் அதில் சேர்க்கப்பட உள்ளன என்று பெருநகர் வளர்ச்சி குழுமம் அறிவித்துள்ளது. 

முன்னதாக, சென்னை மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த 5 சாட்டிலைட் நகரங்களை உருவாக்க திமுக அரசு முடிவு செய்தது, அது மட்டும் அல்லாமல் சென்னை போன்று ஐந்து சாட்டிலைட் நகரங்களை உருவாக்குவதாக தேர்தல் வாக்குறுதி அளித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

Tnpsc Group I Last date tomorrow 

இந்தத் தேர்தல் வாக்குறுதியின் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரத்தில் உள்ள 65 கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு சாட்டிலைட் நகரங்களாக மாற்றப்பட உள்ளது.

65 கிராமங்கள்

இரண்டு சாட்டிலைட் நகரங்களை உருவாக்குவதற்கான திட்ட அறிக்கையை பெருநகர் வளர்ச்சி குழு குழுமம் தயாரித்துள்ளது. அந்த அறிக்கையின் படி செங்கல்பட்டில் 48 கிராமங்கள் மற்றும் காஞ்சிபுரத்தில் 17 கிராமங்கள் மாநில வளர்ச்சி குழுமத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த 65 கிராமங்கள் சென்னை பெங்களூர் சாலையில்  அமைந்துள்ளதால் இந்தப் பகுதிகளை சாட்டிலைட் நகரங்களாக மாற்ற பெரு முயற்சி தேவையில்லை. 

DPI அதிரடி உத்தரவு 

தற்போது  இந்தப் பகுதிகளில் தொழிற்சாலைகள், தொழில்துறை நிறுவனங்கள் அதிகரித்து வருவதால் அதற்கு ஏற்ப மக்கள் தொகை இடம்பெயர்வு அதிகரித்து வருகிறது. 

அதை சமாளிக்கும் வகையில் இந்த இரண்டு சாட்டிலைட் நகர திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த 65 கிராமங்களும் இணைந்து 2 சாட்டிலைட் நகரங்களாக மாற்றப்பட உள்ளது என்று சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் அறிவித்துள்ளது.

IRCTC PLAN TO SELL PASSANGER DETAILS 

செங்கல்பட்டு காஞ்சிபுரம் ஏன்?

இந்தத் திட்டத்திற்கு செங்கல்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான காரணம், செங்கல்பட்டு பகுதிகளில் இந்த வளர்ச்சிக்கு தேவையான சமூகப் பொருளாதார காரணிகள் அதிகம் உள்ளதாக கருதப்படுகிறது. மேலும் செங்கல்பட்டு கடந்த 2019 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் இருந்து பிரிந்து தனி மாவட்டமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதை போன்று காஞ்சிபுரம் மாவட்ட பகுதிகளும் மிகுந்த தொழில்துறை நிறுவனங்கள் உள்ளதால் அந்தப் பகுதிகளும்  சாட்டிலைட் நகரங்களாக மாற்றப்படு தகுதியானது. அங்குள்ள வரலாற்றுச் சின்னங்கள் சிதையாத வண்ணம் இந்த நகரங்கள் உருவாக்கப்பட உள்ளது.

இந்த இந்த இரண்டு சாட்டிலைட் நகர திட்டங்களும் சென்னை மாநகரத்தின் பரப்பளவை விரிவுபடுத்தும் திட்டத்தின் பகுதியாக பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாத யாத்திரை 

3 சாட்டிலைட் நகரங்கள்

இந்த இரண்டு சாட்டிலைட் நகரங்கள் மட்டுமல்லாமல் இன்னும் மூன்று சாட்டிலைட் நகரங்கள் உருவாக்கப்பட உள்ளது. அதில் திருவள்ளூர் சாட்டிலைட் நகரம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மீஞ்சூர், திருமழிசை ஆகியவற்றையும் சாட்டிலைட் நகரங்களாக மாற்ற சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் முடிவு செய்து இருக்கிறது. 

இந்த திட்டத்தில் திருமழிசைக்காக ரூ.1,000 கோடி நிதியை மத்திய அரசு 2021-2022 நிதியாண்டு முதல் 2025-2026 நிதியாண்டு காலக்கட்டத்திற்கு வழங்க 15 வது நிதியாணையத்தின் கீழ் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Post a Comment

Previous Post Next Post