திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் 6 நாள் வசூல் சாதனை...! எவ்வளவு தெரியுமா! மிரண்டு போன சினிமா துறை

சினிமா : தனுஷ் நடிப்பில் ஆகஸ்ட் 18 அன்று உலகம் முழுவதும் வெளியான படம் தான் திருச்சிற்றம்பலம். இதில் தனுஷ் ஜோடியாக நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவனி சங்கர் நடித்துள்ளனர. மேலும் ,இந்த படத்தில் தனுஷ் தந்தையாக பிரகாஷ் ராஜ், மற்றும் பாரதி ராஜா தனுஷ்க்கு தாத்தா கேரக்டரில் மிக சிறப்பாக நடித்து உள்ளனர். 

மித்ரன் ஜகவர் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். இவரும் தனுஷும் இணையும் நான்காவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. திருச்சிற்றம்பலம் படம் வெளியாகி வெற்றகரமாக திரையில் ஓடி கொண்டு இருக்கிறது.

என்னது இனி UPI use பண்ணா கட்டணம் ah

தனுஷ் நடிப்பில் படங்கள் திரைக்கு வந்து கிடட்டதட்ட ஒன்றரை ஆண்டுகள் மேல் ஆகிறது. அவரது ரசிகர்களின் சார்பில் விரைவில் திரையில் படங்கள் வெளிவர வேண்டும் என்று கோரிக்கை வைத்த வண்ணம் இருந்தனர். அதன் பயனாக இந்த படம் வெளிவந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து உள்ளது.

தனுஷ் இதற்கு முன் 

தனுஷ் நடிப்பில் இதற்கு முன்னதாக ஜகமெ தந்திரம், அத்ரங்கி ரே, the gray man, உள்ளிட்ட படங்கள் தொடர்ந்து ஒடிடி வெளியானது இதனால் அவரது ரசிகர்கள் விரைவில் திரையில் அவரை காண வேண்டும் என கோரிக்கைகள் வைத்தனர்.

தனுஷ் நடிப்பு 

தன் இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதை வென்று உள்ளார். மேலும் இது போன்று படங்கள் அவரது நடிப்பில் வெளியாகி வெகு நாட்கள் ஆகிறது என்று ரசிகர்கள் கொண்டாடி  வருகின்றனர். நட்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு எடுக்க பட்ட இந்த படம் அவரது ரசிகர்கள் மட்டும் அல்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் கிடைத்தது என்று தெரிகிறது.

Satellite city ஆக மாறும் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் 

நித்யா மேனன் சிறப்பான நடிப்பு 


இவர் இந்த படத்தில் தனுஷ்க்கு ப்ரெண்ட் ஆக நடித்து உள்ளார் என்பதை விட உண்மையான ப்ரெண்ட் போல வாழ்ந்து உள்ளார். படத்தின் வெற்றிக்கு இவரது இயல்பான நடிப்பு முக்கியமானது. நண்பனின் காதலுக்கு உதவித் செய்வது, நண்பன் கலங்கும் போது தோல் கொடுப்பது போன்ற சீன்களில் இவரின் நடிப்பிருக்கு அனைவரும் மயங்கினர். நித்யா மேனன் பாரதி ராஜா இருவரும் நடித்துள்ள சீன்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

மேலும், படத்தில் குறைவான ஸ்கிரீன் டைம் வந்தாலும் பிரியா பவனி சங்கர் , ராஷி கண்ணா ஆகியோரும் சிறப்பாக நடித்துள்ளனர்.

அனிருத் இசை 

இந்த படத்தின் வெற்றிக்கு அடுத்த முக்கிய காரணம் அனிருத் ரவிச்சந்திரன் இசை. இவரும் தனுஷ் இணைந்து படம் வெளிவந்து வெகுநாட்கள் ஆகிறது. இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெற்றி பெற்றது. மேலும் இவரது பின்னணி இசையும் படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம்.

தனுஷ் மித்ரன் ஜகவர் கூட்டணி 

இவர்கள் இருவரும் இணைந்து இதுவரை 3 படங்கள் கொடுத்துள்ளார்கள். யாரடி நீ மோகினி, உத்தமபுத்திரன், குட்டி ஆகிய படங்கள் வெளியாகி உள்ளது. இது அவர்கள் இணையும் நான்காவது படம்.

இத்தனை அம்சங்கள் உள்ள இத திருச்சிற்றம்பலம் படம் வெளியாகி வெற்றகரமாக ஓடி கொண்டு இருக்கிறது. இந்த படம் கடந்த நான்கு நாட்களில் 65 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து உள்ளது.

மேலும் , இன்னும் வெற்றிகரமாக ஓடும் பட்சத்தில் திருச்சிற்றம்பலம் படம் விரைவில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைக்கும் என்று சினிமா துறை சார்பாக தகவல் வெளியாகி உள்ளது.

அது மட்டும் இல்லாமல் இதுவரை ஆஸ்திரேலியாவில் $200K வசூல் செய்து உள்ளது .

Post a Comment

Previous Post Next Post