ஒரு குரல் புரட்சி திட்டத்திற்கு திருப்பூரில் அமோக வரவேற்பு தினமும் 100+ மேல் குவியும் புகார்கள்

திருப்பூர் மாநகராட்சி உள்பட்ட பகுதிகளில் பொது மக்களிடம் இருந்து தொடர்ந்து புகார்கள், கோரிக்கைகள் வந்த வண்ணம் இருந்தது. 

அதற்காக மக்கள் குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு ஒரு குரல் புரட்சி என்ற திட்டத்தை அமைச்சர்கள் K.N. நேரு, கயல்விழி செல்வராஜ், மு.பெ.சாமிநாதன் உள்பட 13 அமைச்சர்கள் முதல் அமைச்சர் சார்பாக தொடங்கி வைத்தனர்.

முக்கிய செய்திகள் 

மக்கள் தங்கள் புகார்களை உடனடியாக தெரிவிக்கும் வகையில் மாநகராட்சி சார்பில் இலவச உதவி எண் 155304 கொடுக்க பட்டுள்ளது.

ஒரு குரல் புரட்சி திட்டத்தில் சாலை சீரமைப்பு மற்றும் புதிதாக சாக்கடை கட்டுவது தொடர்பாக தினமும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

இந்திய அளவில் புதிய பாடத்திட்டம் 

திருப்பூர் மாநகராட்சி கட்டிடத்தில் உள்ள ஒரு குரல் புரட்சி கட்டுப்பாட்டு அலுவலக அறை ஒன்று காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கும் வகையில் தொடங்க பட்டுள்ளது. 

இங்கு மாநகராட்சியின் 60 வார்டில் உள்ள மக்கள் தங்கள் குறைகளை இந்த கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு வந்து தெரிவிக்கலாம். இங்கு நாள் முழுவதும் 14 பேர் மக்கள் கோரிக்கைகளை செயல்படுத்த பணிபுரிபர்கள் ஆவர்.

இத்திட்டத்தின் கீழ் 11 துறைகளில் 300க்கு மேற்பட்ட பிரிவில் பொதுமக்கள் தங்கள் புகார்களை அளிக்கலாம். சில கால அளவுக்குள் புகார் அளித்த நபருக்கு, புகார் பற்றி எடுத்த நடவடிக்கை குறுஞ்செய்தி மூலம் அனுப்பபடும்.

Breaking News must read

மேலும்,  மாநகராட்சி அலுவலர் பேசியபோது, இத்திட்டம் தொடங்க பட்ட நாள்முதல் ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 100 மேல் புகார்கள் வந்து கொண்டு இருக்கிறது.  

பெரும்பாலும் குடிநீர் பிரச்சனை சாலை சீரமைப்பு, சாக்கடை பிரச்சனை, தெருவிளக்கு பிரச்சனை தொடர்பாகவே புகார்கள் வந்துள்ளது.

எனவே தற்போது புகார்கள் அதிகரித்துள்ளதால் இந்த திட்டத்தை 2 ஆக பிரித்து செயல் படுத்தும் சூழ்நிலை உருவாகி உள்ளது. அதற்கான முயற்சியில் நாங்கள் ஈடுப்பட்டு இருப்பதாக திருப்பூர் மாநகராட்சி அலுவலர் தெரிவித்தார். 

Post a Comment

Previous Post Next Post