சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற விழாவில் காமன் வெல்த் போட்டியில் பங்குகொண்டு பதக்கம் வாங்கி நாட்டை பெருமை படுத்திய தமிழக விளையாட்டு வீரர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சுமார் 4.31 கோடியில் பரிசுத்தொகை வழங்கி விளையாட்டு வீரர்களை மகிழ்ச்சி அடைய செய்தார். இந்த விழாவில் அமைச்சர் மெய்யநாதன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
பின்னர் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் மெய்யநாதன் இங்கிலாந்தில் நடைபெற்ற காமன் வெல்த் போட்டியில் வென்ற வீரர்களுக்கு பரிசு தொகை வழங்கப்பட்டது என்று கூறினார்.சரத் கமலுக்கு ரூ.1.8 கோடி, சத்யனுக்கு ரூ.1 கோடி, சவுரவ் கோசலுக்கு ரூ.40 லட்சம், தீபிகா பல்லிகலுக்கு ரூ.20 லட்சம், பயிற்றுனர்களுக்கு ரூ.51 லட்சம், பவானி தேவிக்கு ரூ.35 லட்சம், பிரனவ் வெங்கடேஷ்க்கு ரூ.5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் பரிசுத்தொகை ரூ.4.31 கோடி ஆகும்.
மேலும் தமிழகத்தின் சிறப்பான திட்டங்களில் ஒன்றான ஒலிம்பிக் தங்க வேட்டை திட்டத்தில் வீரர்கள் கண்டறியப்பட்டு வருவதால் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் பெறுவதற்கான வேலைகள் நடந்து கொண்டு இருப்பதாகவும் கூறி உள்ளார்.
வீரர்கள் பேசியபோது
பவானிதேவி பேசியபோது , ஒவ்வொரு சூழ்நிலையில் தமிழ்நாடு அரசு மூலம் எதிர்பார்த்ததை விட அதிகமான ஆதரவு கிடைத்து வருகிறது என்றும், அத்தகைய