கணேஷ் வெங்கட்ராமன் நடிக்கும் வரலாற்று தொடர்... முழு விவரம் உள்ளே

கணேஷ் வெங்கட்ராமன் நடிக்கும் வரலாற்று தொடர்... 

சினிமா :  இந்தியா கடந்த ஆகஸ்ட் 15ஆம் நாள் தமது 75வது சுதந்திர தினத்தை கொண்டாடியது. இதைப் போற்றும் வகையில் காண்டிலோ பிக்சர்ஸ் மற்றும் டிடி நேஷனல் இணைந்து ஒரு சரித்திற தொடரை உருவாக்க உள்ளது. இந்த தொடர் இந்திய சுத்திரத்திற்குப் போராடிய சரித்திற 75  நாயகர்களின் கதையாகும். இந்த தொடருக்கு ஸ்வராஜ் என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

இந்த இந்திய சரித்திர தொடரில் பிரபல வேலுத் தம்பி கதாப்பாத்திரத்தில் கணேஷ் வெங்கட்ராமன் நடிக்க உள்ளார்.இந்த தொடர் தமிழ், மலையாளம், கன்னடம், மராத்தி , இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளிவர உள்ளது. இந்த தொடரை பிரபலமான ஓடிடி தளத்தில் காணலாம்.

லிங்குசாமி 6 மாதம் சிறைத்தண்டனை அப்படி என்ன நடந்தது 

கணேஷ் வெங்கட்ராமன் 

நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் தமிழ், தெலுங்குப் மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்து உள்ளார். எனினும் சினிமாவில் அவருக்கு என தனி ஆடையாளம் இல்லாமல் அவரால் சினிமாவில் நிலைத்து நிற்க முடிய வில்லை. பின் விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்தார், அது மட்டும் இல்லாமல் அவ்வப்போது கிடைக்கும் சிறு சிறு கதாபாத்திரத்திலும் நடித்து வந்தார். ஆனால் , மக்கள் மனதில் அவரது பெயர் கூட நிற்கவில்லை.


அதற்கு பின் பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 1 அறிமுகம் ஆனார். அதில் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைத்தது. இனி சினிமாவில் சாதிக்க முடியும் என்று கூறினார். ஆனால் பிக் பாஸ் அடுத்த சீசன் வந்த பின்னர் இவரை பற்றி அனைவரும் மறந்தனர். 

தற்போது , ஸ்வராஜ் என்ற சரித்திர தொடரில் பிரபல வேலுத்தம்பி கேரக்டரில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார்.

இது குறித்து அவர் பேசும் போது, வெகு காலமாக கதையில் நடிக்க ஆசைப்பட்டேன்.அது இப்போது நிறைவேறி விட்டது. மேலும் , நம் வரலாற்றில் சொல்லப்படாத பல சரித்திற நாயகர்கள் உள்ளர்கள். அது போன்ற ஒரு சரித்திர தொடரில் நானும் ஓர் அங்கமாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறினார்.


இந்த தொடரில் ஒரு போர் வீரன் போல் நடித்து இருப்பது எனக்கு உண்மையில் மன நிறைவாக உள்ளது என்று கூறினார். இந்த சரித்திர தொடர்
ஞாயிற்றுக்கிழமை தோறும் பிரபல ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post