இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன் உடல்நலக்குறைவால் காலமானார் | முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்

திருநெல்வேலி : திருநெல்வேலியில் உள்ள தன் வீட்டில் இருந்த மேடை பேச்சாளர் நெல்லை கண்ணன் (77) வயது முதிர்வு மற்றும் உடல்நலம் சரி இல்லாததால் இன்று இயற்கை எய்தினார். இவர் பட்டிமன்ற நடுவரும், மேடை இலக்கிய பேச்சாளரும் ஆவார். 

       

தமிழ்க்கடல் என்று சிறப்பிக்க படுபவர். தமிழ் மொழிக்கு இவர் ஆற்றிய தொண்டு மறக்க முடியாதது. இவர் மேடை பேச்சாளர், நடுவர், எழுத்தாளர் என பன்முக ஆற்றல் பெற்றவர். இவர் எழுதிய கதைகள், புதினங்கள், தற்போது  சிறுகதைகள் பள்ளி பாட நூல்களில் உள்ளது.

வன்னியர் சங்க நிர்வாகி கொலை மயிலாடுதுறை கும்பகோணம் சாலையில் மறியல்

இளமை காலத்தில் காங்கிரஸ் கட்சியில் நீண்ட நாள் பணி ஆற்றினார். அதன் பின்னர் 1970 முதல் மேடை பேச்சில் கலந்து கொண்டுள்ளார்.  குன்றக்குடி அடிகளார் உடன் இணைந்து அறிவார்ந்த பட்டி மன்றங்களை நடத்தி இருக்கிறார்.சமீபத்தில் தமிழக அரசின் இளங்கோவடிகள் விருது வென்றார். 

பல நாட்களாக உடல்நிலை மிகவும் மோசமாக ஆனதால் கடந்த ஒரு வாரம் காலமாக உணவு உட்கொள்ள இயலாத நிலையில் இன்று அவர் தன் வீட்டில் இயற்கை எய்தினார். இயற்கை எய்திய செய்தியை அறிந்த பல அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் ஆதரவாக அன்புமணி ராமதாஸ் அறிக்கை 

தற்போது அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் அமைப்புக்கள், பிரமுகர்கள், பொதுமக்கள் என அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

முன்னாள் முதல்வர் காமராஜரின் தீவிர விசுவாசி என்று அழைக்கப்பட்ட நெல்லை  கண்ணன். இன்று இயற்கை எய்தினார் என்பது தமிழ் இலக்கிய உலகிருக்கு ஒரு குறை தான் என்பதில் ஐயம் இல்லை.

முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் 

மறைந்த இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன் அவர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


அரவிந்த் கெஜ்ரிவால் Make India Number 1 திட்டம் 


Post a Comment

Previous Post Next Post