கே.எல். ராகுல் தலைமையில் முதன் முதலாக களம் இறங்கும் இந்திய அணி

ஜிம்பாப்வே இல் சுற்று பயணம் செய்து உள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.

இந்த சுற்று பயணத்திருக்கு முதல் முறையாக கே.எல். ராகுல் கேப்டன் ஆக நியமிக்க பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அறுவை சிகிச்சை செய்து 2 மாதம் கழித்து அணிக்கு திரும்பிய அவரின் ஆட்டத்தை கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் அணியின் கோச் ராகுல் டிராவிட் கவனிப்பார்கள் என்று தெரிகிறது. 


ஏனெனில் விரைவில் ஆசியா கோப்பை தொடங்க உள்ள நிலையில் அவரின் ஆட்டம் முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த தொடரில் தவன், ஹூடா,சாம்சன்,கில் ஆகியோரின் ஆட்டம் முக்கியமானது ஏனெனில் சமீபத்தில் நடந்த வங்கதேச தொடரில் ஜிம்பாவே சிறப்பாக விளையாடி 300,290 போன்ற ஸ்கோர்களை சேஸ் செய்து வென்றுள்ளது. 


அதே உத்வேகத்துடன் ஜிம்பவே அணி களம் இறங்கும் என்பதில் சந்தகமேயில்லை. எனவே இந்த போட்டி ரசிகர்களுக்கு விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.

இந்திய பவுலர்கள் சிராஜ், பிரசித் கிருஷ்ணா, தீபக் போன்ற வேக பந்து பவுலர்கள் இருப்பதுடன் ஸ்பின் பவுலிங் குல்தீப் கையில் உள்ளது. இவர்கள் ஜிம்பவெ அணியின் பேட்ஸ்மேன்களுக்கு சவால் விடுவார்கள்.


ஜிம்பாப்வே அணியை பொறுத்த வரை இந்திய அணிக்கு சவால் விடும் அளவுக்கு பேட்ஸ்மேன்
ஒருவரும் இல்லை என்பது தான் உண்மை. அதுபோல தான் அந்த நாட்டின் கிரிக்கெட் அணியும் தடுமாற்றத்தில் உள்ளது. 

இந்த தொடரில் கிடைக்கும் நிதி மற்றும் கிரிக்கெட் போட்டியை ஒளிபரப்பும் உரிமை போன்ற வற்றின் மூலம் கிடைக்கும் தொகை அந்த நாட்டு கிரிக்கெட் அணிக்கு மிக முக்கியமானது.

வீரர்கள் விவரம் 


ஜிம்பாப்வே அணி: ரெஜிஸ் சாகப்வா(டபிள்யூ/சி), டகுட்ஸ்வானாஷே கைடானோ, இன்னசென்ட் கையா, வெஸ்லி மாதேவெரே, சிக்கந்தர் ராசா, ரியான் பர்ல், லூக் ஜாங்வே, மில்டன் ஷும்பா, டொனால்ட் டிரிபனோ, விக்டர் நயவுச்சி, ரிச்சர்ட் எவன்சராவா, ஜான் க்ளீவ் நகரவா, ஜான் க்ளீவ், நகரவா தடிவானாஷே மருமணி, டோனி முன்யோங்கா, தனகா சிவாங்கா

இந்திய அணி: ஷிகர் தவான், கேஎல் ராகுல்(கேப்டன்), ஷுப்மான் கில், ராகுல் திரிபாதி, சஞ்சு சாம்சன்(வ), தீபக் ஹூடா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், அவேஷ் கான், முகமது சிராஜ், குல்தீப் யாதவ், ஷாபாஸ் அகமது, தீபக் சாஹர், இஷான் கிஷன் , பிரசித் கிருஷ்ணா, ருதுராஜ் கெய்க்வாட்

நேரலை: சோனி ஸ்போர்ட்ஸ்

நேரம் : 12.45 PM 

இடம் : ஹராரே 

Post a Comment

Previous Post Next Post