இ.பி.எஸ் பொதுக்குழு கூட்டம் செல்லாது அதிரடி தீர்ப்பு வழங்கிய உயர்நீதி மன்றம்

சென்னை : இ.பி.எஸ் தலைமையில் கடந்த ஜூலை 11இல் நடைபெற்ற பொது குழு கூட்டம் செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. மீண்டும் மற்றொரு முறை பொது குழு கூட்டம் நடத்த உயர் நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்தது.

சென்னையில் கடந்த ஜூலை 11இல் நடைபெற்ற பொது குழு கூட்டம் செல்லாது என்று ஓ. பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை உயர்நீதி மன்றம் இன்று வழங்கி உள்ளது.

திருப்பூர் ஒரு விரல் புரட்சி திட்டம் மாபெரும் வெற்றி

சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் வழங்கிய தீர்ப்பில் கூறியதாவது: இனி தற்போது தேர்வு செய்யப்பட்ட பொது செயலாளர் தேர்தல் செல்லாது என்றும், ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் இணைந்து தான் பொதுக்குழு கூட்டம் நடத்த வேண்டும் என்று பரிந்துரைத்தார்.

பொதுக்குழு கூட்டம் தொடங்கும் 30 நாட்களுக்கு முன் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்றும் அதுவரை ஜூன் 23க்கு முன் இருந்த நிலைப்பாடு தொடரும் என்று உயர்நீதி மன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு வழங்கினார். மேலும்  தனிக் கூட்டம் நடத்த கூடாது என்றும், கூட்டம் தொடங்க சட்ட ஆணையரை வைக்க வேண்டும் என நீதிபதி தெரிவித்தார்.

Breaking News Today 

இந்த தீர்ப்பின் மூலம் பன்னீர்செல்வம் மிகுந்த சந்தோசத்துடன் நீதி மன்றதை விட்டு வெளியே சென்றார். இதன் மூலம் அதிமுக வில் மீண்டும் இரட்டைத் தலைமை என்று உறுதியாகிறது. இந்த முடிவுக்கு eps அணி என்ன செய்ய போகிறார் என்று தெரியவில்லை.

 வழக்கு ஓர் பார்வை:

கடந்த ஜூலை 11ம் நாள் அதிமுக பொதுக்குழு கூட்டம் ops இல்லாமல் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில்  அவை தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப் பட்டார்.  இந்த கூட்டம் செல்லாது என்றும் அவைத்தலைவர் தேர்தல் செல்லாது என்றும் ops மற்றும் கழக உறுப்பினர் வைரமுத்து சென்னை உயர்நீதி மன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.


முதலில் இதை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பொதுக்குழுவை திட்டமிட்ட படி நடத்தலாம் என்று தீர்ப்பு வழங்கினார். இதை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதை விசாரித்த உச்சநீதி மன்றம் இந்த வழக்கை மீண்டும் சென்னை உயர்நீதி மன்றம் 2 வாரங்களில் விசாரித்து தீர்ப்பு வழங்கும்படி உத்தரவு வழங்கினார்.


வழக்கு விசாரணை வேறு நீதிபதி மாற்றக்கோரி உயர்நீதி மன்றத்தில் கடிதம் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் வைரமுத்து சார்பாக கொடுக்கப்பட்டது. அதை ஏற்றுக் கொண்டு உயர்நீதி மன்றம் நீதிபதி ஜெயச்சந்திரன் தலைமையில் விசாரிக்க ஆணை பிற்பித்தது. 

பின் இந்த வழக்கின் விசாரணை கடந்த ஆகஸ்ட் 10 மற்றும் 11 தேதிகளில் நடைெற்றது. அனைத்து தரப்பு கோரிக்கைகளை விசாரித்து நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பை தேதி கூறாமல் ஒத்திவைத்தார்.


அந்த வழக்கின் தீர்ப்பை இன்று வழங்கினார். இதன் பின் ஓ. பன்னீர்செல்வம் வீட்டு முன் அவரது ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

பின் செய்தியாளர்கள் முன் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயபாலன் இது முடிவு இல்லை. நாங்கள் மேல்முறையீடு செய்வோம் என்று கூறினார். 


Post a Comment

Previous Post Next Post